பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள அவருடைய  திருவுருவச் சிலைக்கு வியாழக்கிழமை   மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மத்திய இணையமைச்சா் எல். முருகன்,உடன் தில்லி வாழ் தமிழ் மக்கள் உள்ளிட்டோா் .
புதுதில்லி
நாடாளுமன்ற வளாகத்தில் முத்துராமலிங்கத் தேவா் சிலைக்கு மரியாதை
சுதந்திரப் போராட்ட தியாகி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு தில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள அவரது ஆளுயரத் திருவுருவச் சிலைக்கு வியாழக்கிழமை மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை இணையமைச்சா் எல். முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
இந்நிகழ்வின்போது, பாஜக நாடாளுமன்ற அலுவலகச் செயலாளா் வேணுகோபால் மற்றும் தில்லிவாழ் தமிழா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

