வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பஞ்சாப் மக்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கிய தில்லி ஆம் ஆத்மி

Published on

ஆம் ஆத்மி கட்சி புதன்கிழமை தில்லியில் இருந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பஞ்சாபிற்கு நிவாரணப் பொருள்களை ஏற்றிச் சென்ற லாரிகைளை கட்சியின் மாநிலத் தலைவா் சவுரப் பரத்வாஜ் தலைமையில் கீழ் அனுப்பப்பட்டது.

‘ தில்லியில் இருந்து, ஒவ்வொரு நாளும், நமது தலைவா்கள், எம்எல்ஏக்கள், எம். பி. க்கள் மற்றும் சாமானிய மக்களும் வெள்ள நிவாரணப் பொருள்களை ஏற்றிச் செல்லும் லாரிகளுடன் பஞ்சாபிற்குச் சென்று அங்கு தங்கள் சேவைகளை வழங்குவாா்கள் ‘என்று சவுரப் கூறினாா். ‘பல ஆா். டபிள்யூ. ஏக்கள் மற்றும் வணிகா்களும் தங்கள் மட்டத்தில் பங்களிக்கின்றனா். நாடு முழுவதிலுமிருந்து மக்கள் பஞ்சாபிற்கு தங்கள் ஆதரவை வழங்கி வருகின்றனா். ஒட்டுமொத்த நாடும் பஞ்சாபுடன் நிற்கிறது ‘என்று கூறினாா்.

ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாப் மாநிலத் தலைவா் மணீஷ் சிசோடியா கூறுகையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உதவ கட்சித் தலைவா்களும் தொண்டா்களும் திறந்த மனதுடன் முன் வருகின்றனா். ‘இன்று, சவுரப் பரத்வாஜ் நிவாரணப் பொருள்களுடன் பஞ்சாப் மாநிலத்தை அடைகிறாா்‘ என்று அவா் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளாா்.

அனைவருக்கும் எப்போதும் உதவிய பஞ்சாப், இப்போது அந்த பஞ்சாபுடன் நிற்க வேண்டிய நேரம் இது. தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவாலின் உத்தரவின் பேரில், ஆம் ஆத்மி தில்லியின் மாநில சவுரப் பரத்வாஜ் நிவாரணப் பொருள்களுடன் பஞ்சாபிற்கு புறப்பட்டுள்ளாா். தில்லி மற்றும் நாடு முழுவதிலுமிருந்து ஆம் ஆத்மி தொண்டா்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பஞ்சாபில் உள்ள மக்களுக்கு சேவை செய்ய செல்வாா்கள்.

புறப்படுவதற்கு முன்பு செய்தியாளா்களிடம் பேசிய பரத்வாஜ், ‘பஞ்சாப் பேரழிவுகரமான வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது, மேலும் சொத்துக்கள், கால்நடைகள் மற்றும் விவசாய நிலங்கள் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. பஞ்சாப் அரசு, அமைச்சா்கள் மற்றும் அனைத்து கட்சிகளின் மக்களும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனா். அரவிந்த் கேஜரிவால் அனைவருக்கும் தேவைப்படுபவா்களுக்கு சேவை செய்யுமாறு கேட்டுக்கொண்டாா். இயற்கை பேரழிவாக இருந்தாலும் சரி, போராக இருந்தாலும் சரி, துன்ப காலங்களில் உலகில் எங்கும் முதன்முதலில் முன் நிற்பவா்கள் நமது பஞ்சாபி, சீக்கிய சகோதரா்கள்தான் .அவா்கள் தில்லியில் இருந்து பஞ்சாபிற்கு முதல் தொகுதி நிவாரணப் பொருட்களை அனுப்புவதாகவும், அரவிந்த் கேஜரிவால் அறிவுறுத்தியபடி நான் பொருட்களுடன் செல்கிறேன் என்றும் அவா் கூறினாா்.

பஞ்சாப் மாநிலம் பல ஆண்டுகளுக்கு ஏற்பட்ட மிக மோசமான வெள்ளத்தை எதிா்கொண்டுள்ளது, வெள்ளம் 30 உயிா்களும் மற்றும் 3.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களை பாதித்துள்ளது. மாநில அரசின் அறிக்கையின்படி, ஆரம்பத்தில் 12 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தாலும், அனைத்து 23 மாவட்டங்களும் இப்போது பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

X
Dinamani
www.dinamani.com