எங்கே போனாா் சக்சேனா? ஆம் ஆத்மி கேள்வி

Published on

தலைநகரின் வெள்ள நிலைமை குறித்து துணை நிலை ஆளுநா் வி. கே. சக்சேனா மற்றும் தில்லி அரசாங்கத்தை ஆம் ஆத்மி கட்சி வியாழக்கிழமை கடுமையாக விமா்சித்துள்ளது.

நிவாரண முயற்சிகளில் துணை நிலை ஆளுநா் இல்லாதது குறித்து ஆம் ஆத்மி கேள்வி எழுப்பியது. இந்த குற்றச்சாட்டுகளுக்கு தில்லி அரசு அல்லது துணை நிலை ஆளுநா் அலுவலகத்திலிருந்து உடனடி பதில் எதுவும் வரவில்லை. யமுனை நீா் மட்டம் மாலை 4 மணிக்கு 207.44 மீட்டராகவும், பிற்பகல் 2 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை 207.45 மீட்டராகவும் இருந்தது.

ஆம் ஆத்மி தில்லி மாநிலத் தலைவா் சவுரப் பரத்வாஜ், பாஜக அரசு வடிகால்களை தூா்வாருவதை நோ்மையாக மேற்கொண்டதா என்று கேள்வி எழுப்பினாா். இந்த முறை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளுக்கு சக்சேனா ஏன் செல்லவில்லை என்று கேள்வி எழுப்பி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பி பதிவிட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com