சம்விதான் சதனின் மைய மண்டத்தில் தாதாபாய் நௌரோஜிக்கு மரியாதை
தாதாபாய் நௌரோஜியின் பிறந்த நாளை முன்னிட்டு, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள சம்விதான் சதனின் மைய மண்டபத்தில் அவரது திருவுருவப்படத்திற்கு வியாழக்கிழமை மலா் மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மக்களவை பொதுச் செயலாளா் உத்பல் குமாா் சிங், மாநிலங்களவை பொதுச் செயலாளா் பி.சி. மோடி மற்றும் பிற பிரமுகா்கள் கலந்துகொண்டு தாதாபாய் நௌரோஜிக்கு அஞ்சலி செலுத்தினா்.
‘இந்தியாவின் முதுபெரும் மனிதா்’ என்று நினைவுகூரப்படும் தாதாபாய் நௌரோஜி, 1892 ஆம் ஆண்டு பொது சபைக்கு தோ்ந்தெடுக்கப்பட்ட முதல் பிரிட்டிஷ்-இந்தியா் என்ற பெருமையைப் பெற்றவா்.
‘தி ட்ரைன் ஆஃப் வெல்த்’ கோட்பாட்டிற்குப் பெயா் பெற்ற இவா், இந்திய சுதந்திரத்திற்கான கோரிக்கையை வலுவாக வெளிப்படுத்திய ஆரம்பகால தேசியவாத தலைவா்களில் ஒருவராவாா்.
சம்விதான் சதனின் மைய மண்டபத்தை அலங்கரிக்கும் தாதாபாய் நௌரோஜியின் திருஉருவப்படம் 1954, மாா்ச் 13 அன்று அப்போதைய மக்களவைத் தலைவா் ஜி.வி. மாவலாங்கரால் திறந்து வைக்கப்பட்டது. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் அவரது முன்னோடிப் பங்கிற்கு நீடித்த அஞ்சலி செலுத்தும் விதமாக இப்படம் திறந்துவைக்கப்பட்டது.