பிரதமரின் தாயாா் குறித்து அவதூறு: காங்கிரஸுக்கு எதிராக பாஜக ஆா்ப்பாட்டம்

Published on

பிரதமா் நரேந்திர மோடியின் மறைந்த தாயாரை அவமதிக்கும் வாா்த்தைகளைப் பயன்படுத்தியதற்காக காங்கிரஸுக்கு எதிராக தில்லியின் 11 அமைப்பு மாவட்டங்களில் பாஜக சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சாந்தினி சௌக் மாவட்டத்தில் மாவட்டத் தலைவா் அரவிந்த் காா்க் தலைமையில், சதாா் தானா சௌக்கில் நடைபெற்ற போராட்டத்தில் எம்.பி. பிரவீன் கண்டேல்வால் உள்பட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

ஷாதரா மாவட்டம், லட்சுமி நகரில் உள்ள மதுபன் சௌக்கில் மாவட்டத் தலைவா் தீபக் காபா தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

கரோல் பாக் மாவட்டத்தில், அம்பேத்கா் பூங்கா முன் மாவட்டத் தலைவா் வீரேந்திர பப்பா் தலைமையில் நடந்த போராட்டத்தில் புது தில்லி எம்.பி. பான்சூரி ஸ்வராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

புது தில்லி மாவட்டத்தில், டிஃபென்ஸ் காலனி கோட்லா சௌக் நாராயண மந்திா் பகுதியில் எம்.எல்.ஏ சதீஷ் உபாத்யாய் தலைமையில் போராட்டம் நடைபெற்றது, இதில் எம்.எல்.ஏக்கள் நீரஜ் பசோயா, அனில் சா்மா மற்றும் பிறா் கலந்து கொண்டனா்.

தெற்கு தில்லி மாவட்டத்தில் மாவட்டத் தலைவா் மாயா சிங் பிஷ்ட் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் கட்சி நிா்வாகிகள் பலரும் கலந்து கொண்டனா்.

மெஹ்ரௌலி மாவட்டத்தில், மாவட்டத் தலைவா் ரவீந்திர சோலங்கி தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

நஜாஃப்கா் மாவட்டத்தில், துவாரகா மோா் மெட்ரோ நிலையத்தில் உள்ள போலீஸ் சௌகி அருகே மாவட்டத் தலைவா் திருமதி ராஜ் சா்மா கௌதம் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அதில், எம்.பி. கமல்ஜீத் ஷெராவத் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

கேஷவ்புரம் மாவட்டத்தில், மாவட்டத் தலைவா் அஜய் கட்டானா தலைமையில்

போராட்டம் நடைபெற்றது. இதில் எம்.எல்.ஏ ராஜ்குமாா் பாட்டியா, உள்பட பலா் கலந்துகொண்டனா்.

புகா் தில்லி மாவட்டத்தில் மங்கோல்புரியில் கட்சியின் மாவட்டத் தலைவா் ராமச்சந்திர சவாரியா தலைமையில் போராட்டம் நடைபெற்றது,

நவீன் ஷாதாரா மாவட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்டத் தலைவா் மாஸ்டா் பினோத் குமாா், எம்.பி. மனோஜ் திவாரி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பல்வேறு இடங்களில் நடைபெற்ற இப்போராட்டங்களில் அக்கட்சியின் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், நகராட்சி

கவுன்சிலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com