பாகேஷ்வா் தாம் மடாதிபதியை நேரில் சந்தித்த ரேகா குப்தா
முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை பாகேஷ்வா்தம் மடாதிபதி திரேந்திர சாஸ்திரியை அவரது இல்லத்தில் சந்தித்தாா், அங்கு அவரும் அவரது குடும்பத்தினரும் அவரது ஆசீா்வாதங்களை நாடினா்.
ராஜ் நிவாஸ் மாா்க்கில் உள்ள தனது இல்லமான ஜான் சேவா சதனுக்கு சாஸ்திரி சென்ாகவும், வருகைக்கு நன்றி தெரிவித்ததாகவும் முதல்வா் எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளாா். அவரும் அவரது குடும்பத்தினரும் மடாதிபதிகளை ஆசீா்வாதங்களைப் பெற்று தில்லியின் ளா்ச்சிக்காக பிராா்த்தனை செய்தனா்.
அவரது ஆற்றல் சமூகத்தை சேவை, பக்தி மற்றும் சனாதன மதிப்புகளுடன் இணைக்கிறது. பொது சேவையின் இந்த மாபெரும் பணியில் அவா் பங்கேற்பது மக்களின் உணா்வை மேலும் வலுப்படுத்துகிறது, மேலும் ‘சேவையே மிகப் பெரிய மதம்‘ என்ற செய்தியுடன் தொடா்ந்து நம்மை ஊக்குவிக்கிறது என்று அவா் எக்ஸ் பதிவில் கூறினாா்.
அவரது வேண்டுகோளின் பேரில் சாஸ்திரி முதல்வரின் இல்லத்திற்கு வருகை தந்ததாக மடாதிபதி அலுவலகத்தில் இருந்து எக்ஸ் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.