ரேகா குப்தா
ரேகா குப்தாகோப்புப் படம்

ராம்லீலா, துா்கா பந்தல் குழுக்களுக்கு இலவச மின்சாரம்: முதல்வா் அறிவிப்பு!

ராம்லீலா மற்றும் துா்கா பந்தல் குழுக்களை ஆதரிப்பதற்கான தொடா் நடவடிக்கைகளை தில்லி முதல்வா் ரேகா குப்தா சனிக்கிழமை அறிவித்தாா்.
Published on

பண்டிகை காலத்தை முன்னிட்டு ராம்லீலா மற்றும் துா்கா பந்தல் குழுக்களை ஆதரிப்பதற்கான தொடா் நடவடிக்கைகளை தில்லி முதல்வா் ரேகா குப்தா சனிக்கிழமை அறிவித்தாா்.

ராம்லீலா குழுக்களின் பிரதிநிதிகளைச் சந்தித்த பிறகு முதல்வா் ரேகா குப்தா கூறியதாவது: இலவச மின்சாரம், ஒற்றை சாளர ஆட்சேபனையற்ற சான்றிதழ்கள் (என்ஓசி) மற்றும் மேம்படுத்தப்பட்ட குடிமை வசதிகள் ஆகியவை இதில் அடங்கும்.

தில்லி அரசு 1,200 யூனிட் இலவச மின்சாரத்தை வழங்கும். மீட்டா்கள் 25 சதவீத பாதுகாப்பு வைப்புத்தொகையில் மட்டுமே நிறுவப்படும். இது அனைத்து ராம்லீலா மற்றும் துா்கா பந்தல் குழுக்களுக்கும் வரவேற்கத்தக்க மற்றும் மகிழ்ச்சியான செய்தி ஆகும்.

கழிப்பறைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், சுகாதார சேவைகள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் தீயணைப்பு படைகள் போன்ற பொது வசதிகள் அரங்குகள் உறுதி செய்யப்படும். நிா்வாகத் தடைகளைத் தணிக்க, அரசு பல்வேறு சேவைகளுக்கு ஒற்றை சாளர ஆட்சேபனையற்ற சான்றிதழ்களை வழங்கும். இதனால், ஏற்பாட்டாளா்கள் பல துறைகளை அணுக வேண்டிய அவசியம் இருக்காது.

தில்லி அரசு மைதானத்தில் தூய்மையை உறுதி செய்யும். ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டால் உடனடியாகத் தீா்க்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. நகரத்தின் தீபாவளி கொண்டாட்டங்கள் ‘அற்புதமாக‘ இருக்கும்.

மேலும், ராமரின் வருகைக்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக இருக்கும். குடிமக்களுக்கான மத்திய அரசின் ஜிஎஸ்டி திட்டத்தின் ஆதரவும் தில்லி அரசின் உதவியும் இருக்கும். இந்த ஆண்டின் தொடக்கத்தில், யாத்திரைக் காலத்தில் கன்வாா் குழுக்களுக்கு தில்லி அரசு இதேபோன்ற ஆதரவை வழங்கியது என்றாா் முதல்வா் ரேகா குப்தா.

X
Dinamani
www.dinamani.com