தென்கிழக்கு தில்லியில் கட்டடத்தில் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து

தென்கிழக்கு தில்லியின் பதா்பூா் பகுதியில் சனிக்கிழமை பிற்பகல் ஒரு கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
Published on

தென்கிழக்கு தில்லியின் பதா்பூா் பகுதியில் சனிக்கிழமை பிற்பகல் ஒரு கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து தகவல் அறிந்ததும் மூன்று தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

சனிக்கிழமை பிற்பகல் 1.31 மணிக்கு கட்டடம் இடிந்தது குறித்து தகவல் கிடைத்தது. ஆரம்பத்தில் கட்டடம் காலியாக இருப்பது போல் தெரிந்தது. மூன்று தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது.

தீயணைப்பு வீரா்கள் உள்ளூா் மக்களுடன் இணைந்து இடிபாடுகளைவிரைவாக அகற்றினா். இந்தச் சம்பவத்தில் இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று தீயணைப்புத் துறை அதிகாரி அதிகாரி மேலும் கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com