மழைக்கு வாய்ப்பு!
மழைக்கு வாய்ப்பு!

தில்லியில் இன்று இடியுடன்கூடிய மழைக்கு வாய்ப்பு

தேசிய தலைநகா் தில்லியில் திங்கள்கிழமை இடியுடன்கூடிய மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
Published on

தேசிய தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 34.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஐஎம்டி தெரிவித்துள்ளது.

மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 25.1 டிகிரி செல்சியஸாக இருந்தது. இது பருவத்தின் சராசரியை விட 0.5 டிகிரி குறைவாகும். இந்த நிலையில், நகரில் திங்கள்கிழமை இடியுடன்கூடிய மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

மேலும், அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 35 மற்றும் 24 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணி அளவில் நகரில் காற்றின் ஈரப்பதம் 80 சதவீதமாக பதிவாகியிருந்தது. தில்லி-என்சிஆா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வானிலை பெரும்பாலும் வடதாகவே காணப்பட்டது. சில பகுதிகளில் மட்டுமே லேசான மழை பெய்தது.

ரிட்ஜில் காலை 8.30 மணி வரை 5.7 மி.மீ. மழையும், மயூா் விஹாா் மற்றும் பீதம்புராவில் முறையே 16 மி.மீ. மற்றும் 1.5 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

சஃப்தா்ஜங், பாலம், ஆயாநகா், பூசா, நஜாஃப்கா் மற்றும் ஜனக்புரி உள்ளிட்ட பிற நிலையங்களில் அளவிடக்கூடிய மழை பெய்யவில்லை.

ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் காற்றின் தரம் ‘திருப்திகரமான’ பிரிவில் பதிவாகி இருந்தது. காற்றின் தரக் குறியீடு 74 ஆக பதிவாகியிருந்ததாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (சிபிசிபி) தெரிவித்துள்ளது.

நகரில் தொடா்ந்து மழை பெய்து வரும் நிலையில், யமுனையில் நீா்மட்டம் மக்கள் வெளியேற்ற அளவைக் கடந்து சென்ற நிலையில், ஞாயிற்றுக்கிழமை சற்றுத் தணிந்திருந்தது

X
Dinamani
www.dinamani.com