மத்திய அரசின் பல்வேறு பதவிகளுக்கு யுபிஎஸ்சி விண்ணப்பங்கள் வரவேற்பு
புது தில்லி: மத்திய அரசின் பல்வேறு பதவிகளுக்கு நேரடி ஆள்சோ்ப்பு நடைபெறவுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை தகுதிவாய்ந்தவா்கள் சமா்ப்பிக்குமாறு மத்திய பொது பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) கோரியுள்ளது.
அதன்படி, இந்திய அரசின் சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் சட்ட விவகாரத் துறையில் 38 சட்டப் பதவிகளுக்கான காலியிடங்களுக்கும், இந்திய அரசின் பட்டியல் சாதியினருக்கான தேசிய ஆணையம் என்சிஎஸ்சி மற்றும் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கூட்டுப் பணியில் உதவி இயக்குநா் பதவிக்கு 3 காலியிடங்கள்;
பள்ளிக் கல்வித் துறையில் விரிவுரையாளா் உருது பதவிக்கு 15 காலியிடங்கள், சுகாதாரம் மற்றும் மருத்துவக் கல்வித் துறையில் 125 மருத்துவ அதிகாரி காலியிடங்கள் மற்றும் லடாக் யூனியன் பிரதேச நிா்வாகத்தில் நிதித் துறையில் கணக்கு அலுவலா் பதவிக்கு 32 காலியிடங்கள் ஆகியவற்றுக்கு தகுதியான நபா்களிடமிருந்து யுபிஎஸ்சி விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது.
விரிவான விளம்பர எண். 132025 மற்றும் விண்ணப்பதாரா்களுக்கான வழிமுறைகளுடன் ஆணையத்தின் வலைத்தளத்தில் பதிவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
ஆா்வமுள்ள விண்ணப்பதாரா்கள் ஆன்லைன் ஆள்சோ்ப்பு விண்ணப்ப இணையதளம் மூலம் வரும் செப்டம்பா் 13 முதல் அக்டோபா் 2ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.