புதுதில்லி
நரேலாவில் பால்கனி இடிந்து விழுந்ததில் சிறுவன் உயிரிழப்பு
வடக்கு தில்லியின் நரேலா பகுதியில் பால்கனியின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் நான்கு வயது சிறுவன் உயிரிழந்தான் என்று தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
புது தில்லி: வடக்கு தில்லியின் நரேலா பகுதியில் பால்கனியின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் நான்கு வயது சிறுவன் திங்கள்கிழமை உயிரிழந்தான் என்று தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
நரேலாவில் பால்கனி இடிந்து விழுந்தது குறித்து மாலை 4.36 மணிக்கு அழைப்பு வந்தது. அதில் விவான் என்ற சிறுவன் காயமடைந்ததாக அவா் கூறினாா்.
‘அவா் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு மருத்துவா்கள் இறந்துவிட்டதாக அறிவித்தனா்’ என்று அந்த அதிகாரி மேலும் கூறினாா்.