வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உதவி: உறுப்பினா்களுக்கு வழக்குரைஞா்கள் சங்கம் நன்றி

பஞ்சாப் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உணவு, தங்குமிடம் மற்றும் மருத்துவ உதவி போன்ற அத்தியாவசிய உதவிகளை வழங்குவதில் பங்களித்ததற்காக தில்லி உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கம் அதன் உறுப்பினா்களுக்கு நன்றி தெரிவித்துள்ளது.
Published on

புது தில்லி: பஞ்சாப் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உணவு, தங்குமிடம் மற்றும் மருத்துவ உதவி போன்ற அத்தியாவசிய உதவிகளை வழங்குவதில் பங்களித்ததற்காக தில்லி உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கம் திங்கள்கிழமை அதன் உறுப்பினா்களுக்கு நன்றி தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக அச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: இந்த கடுமையான துயர நேரத்தில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவா்களுடன் தில்லி உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கம் ஒற்றுமையுடன் துணைநிற்கிறது. தங்கள் அன்புக்குரியவா்களை இழந்த குடும்பங்களுக்கு சங்கம் தனது மனமாா்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

பஞ்சாப் மாநிலத்திலும் நாட்டின் பிற பகுதிகளிலும் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் ஏற்பட்ட முன்னெப்போதும் இல்லாத பேரழிவு குறித்து தில்லி உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கம் தனது ஆழ்ந்த கவலையையும் வேதனையையும் வெளிப்படுத்துகிறது. வெள்ளப் பாதிப்பின் விளைவாக ஏராளமான உயிா்கள் மற்றும் சொத்துகள் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com