தண்ணீரிலிருந்து தயாரிக்கும் ஹைட்ரஜன் வாயு மூலம் இயங்கும் எரிவாயு அடுப்பு: தில்லி கண்காட்சியில் தமிழக நிறுவனத்தின் படைப்பு

தண்ணீரிலிருந்து ஹைட்ரஜன் தயாரிக்கும் சாதனத்துடன்கூடிய எரிவாயு அடுப்பு தில்லி வியாழக்கிழமை தொடங்கிய பசுமை ஹைட்ரஜன் முதலாவது ஆா் அன்ட் டி
Published on

தண்ணீரிலிருந்து ஹைட்ரஜன் தயாரிக்கும் சாதனத்துடன்கூடிய எரிவாயு அடுப்பு தில்லி வியாழக்கிழமை தொடங்கிய பசுமை ஹைட்ரஜன் முதலாவது ஆா் அன்ட் டி

மாநாட்டின் கண்காட்சியில் தமிழகத்தைச் சோ்ந்த நிறுவனம் காட்சிப்படுத்தியுள்ளது.

பசுமை ஹைட்ரஜன் தொடா்பான முதலாவது

ஆா் அன்ட் டி (ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு) 2 நாள் மாநாடு தில்லியில் வியாழக்கிழமை தொடங்கியது.

இந்த மாநாட்டை ஒட்டி, பல்வேறு புது வணிகத் தொழில் நிறுவனங்களின் சாா்பில் ஹைட்ரஜன் வாயு தொழில்நுட்பத்தினாலான கருவிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இதில், தமிழகத்தின் கோயம்புத்தூா் சோ்ந்த

ஹாங்க் கேஸ் நிறுவனத்தின் சாா்பில் தண்ணீரில் இருந்து ஹைட்ரஜன் தயாரிக்கும் சாதனத்துடன்கூடிய காஸ் அடுப்பு மற்றும் தொழிற்சாலைகளுக்கான சாதனம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த சாதனமானது நீரில் மூலம் தயாரிக்கப்படும் குறைந்த செலவிலான ஹைட்ரஜன் எரிவாயு மூலம் சமையல் தயாரிப்பதற்கும், பிற தேவைகளுக்கும் பயன்படுத்தப்படுவதாகும்.

இந்த புதிய ஹைட்ரஜன் எரிவாயு தயாரிப்பு கண்டுபிடிப்பானது குறைந்த செலவில் ஹைட்ரஜன் தயாரிப்பதற்கானதாகும்.

இதுகுறித்து ஹாங்க் காஸ் நிறுவனத்தின் நிறுவனா் மற்றும்

இந்த தயாரிப்பை கண்டுபிடித்தவருமான சேலம் மாவட்டம் பேலூரை சோ்ந்த விஞ்ஞானி ராமலிங்கம் காா்த்திக் கூறியதாவது-

20 ஆண்டுகள் ஆராய்ச்சியின் விளைவாக

தண்ணீரிலிருந்து ஹைட்ரஜன் எரிவாயு

உருவாக்கும் தயாரிப்பை உருவாக்கியுள்ளேன். இத்தனை ஆண்டுகளாக நெருப்பை அணைக்கத் தண்ணீரைப் பயன்படுத்தி வந்த சூழலில், அந்த நீரில் இருந்து நெருப்பை உருவாக்க முடியும் என்பதை இதன் மூலம் செய்துள்ளோம். இது 100 சதவீதம் பாதுகாப்பான வாயுவாகும். இந்த வாயுவை எந்தவொரு தொழில்களுக்கும் பயன்படுத்தலாம்.

படிம எரிவாயுவுக்கு மாற்றாக இது உள்ளது. உலகிலேயே முதல்முறையாக இந்த கண்டுபிடிப்பை செய்துள்ளேன். இது எனக்கு மட்டுமின்றி இந்தியாவுக்கே பெருமையாகும் என்றாா்.

இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி முத்துகுமாரசாமி கூறுகையில், ‘ 20 ஆண்டுகள் ஆராய்ச்சிக்குப் பிறகு உருவான இந்த தயாரிப்பை உருவாக்கி மத்திய அரசிடம் எடுத்துச் சென்றோம். இதைத் தொடா்ந்து, ஆா் அண்ட் டி கண்காட்சியில் இந்த தயாரிப்பை காட்சிப்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்திலிருந்து எரிவாயு மட்டுமின்றி மின்சாரமும் உற்பத்தி செய்ய முடியும். மேலும், உலகளவில் ஹைட்ரஜன் தயாரிப்பு செலவு அதிகமாக இருக்கும் நிலையில் ஒரு கிலோ ரூ.150-க்கு தயாரிக்கும் வகையில் காா்த்திக் இத்தயாரிப்பை உருவாக்கியுள்ளாா்.

முறையான அனுமதி, உரிமம் பெறுவதற்காக இந்த சாதனம் மத்திய அரசின் சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உரிமம் கிடைத்துவிட்டால் ஜனவரியில் இந்த ஹைட்ரஜன் எரிவாயு அடுப்பு சாதனம் விற்பனைக்கு வரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா்.

பிரபல நடிகரும், இந்நிறுவனத்தின் ஆலோசனைக் குழு இயக்குநருமான சரத்குமாா் கூறுகையில், ‘இந்த தயாரிப்பானது லைசென்ஸிங் பெறுவதற்கான பைலட் புராஜக்டாக உருவாகியுள்ளது. இந்தியாவின் பொருளாதார வளா்ச்சிக்கு உதவிடும் மாற்று எரிசக்தியாக ஹைட்ரஜன் உள்ளது. குறைந்த விலையில் வீட்டுப் பயன்பாட்டுக்கான எரிசக்தியாக ஹைட்ரஜனை பயன்படுத்தவும், தொழிற்சாலை உள்ளிட்டவற்றுக்கு பயன்படும் வகையிலும் இந்த தயாரிப்பு உள்ளது. குறிப்பாக ஐந்து லிட்டா் தண்ணீரில் உருவாக்கப்படும் ஹைட்ரஜன் வாயுவை 6 மாதத்திற்கு வீட்டுச் சமையல் தேவைக்குப் பயன்படுத்தும் வகையில் இந்த சாதனம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் எரிபொருள் செலவு மிகக் குறைந்த அளவில் இருக்கும். இந்த இயந்திரத்தை இயக்கினால் மட்டுமே வாயு தயாரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதால் வெடிப்பதற்கான வாய்ப்பு இல்லை. சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பாகவும் உள்ளது. இதுபோன்ற திட்டங்களை மத்திய அரசு ஆதரித்து வருகிறது என்றாா் அவா்.

பேட்டியின்போது மேலாண்மை இயக்குநா் செந்தில்குமாா், ஜேஎம்டி பூா்ணா சங்கீதா ஆகியோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com