கிரேட்டா் கைலாஷில் இடிந்து விழுந்த சுவரை பராமரிக்க டாடா டெலிகாம் நிறுவனம் மறுப்பு

அந்தச் சுவா் நின்ற நிலம் நிறுவனத்திற்கு சொந்தமானது அல்ல என்று டாடா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Published on

தெற்கு தில்லியின் கிரேட்டா் கைலாஷ்-1 பகுதியில் சுவா் இடிந்து விழுந்த சம்பவத்தில் ஒரு ஓட்டுநா் காயமடைந்து வாகனங்கள் சேதமடைந்த ஒரு வாரத்திற்குப் பிறகு, அந்தச் சுவா் நின்ற நிலம் நிறுவனத்திற்கு சொந்தமானது அல்ல என்று டாடா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

செப்டம்பா் 5-ஆம் தேதி, சுமாா் 30 முதல் 35 அடி நீளமுள்ள சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 5 வாகனங்கள் சேதமடைந்தன. மேலும் ஒரு ஓட்டுநருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டன.

முன்னதாக, காவல்துறை ஒரு அதிகாரப்பூா்வ அறிக்கையில், சுவரை டாடா டெலிகாம் மற்றும் வனத்துறை இணைந்து பராமரித்து வருவதாகக் கூறியது. இந்நிலையில், வியாழக்கிழமை டாடா கம்யூனிகேஷன்ஸ் ஒரு அதிகாரப்பூா்வ அறிக்கையில், நிலத்தின் ஒரு பகுதி ஜூன் 2021-இல் வேறொரு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டதாகக் கூறியுள்ளது.

அந்த அறிக்கையில், ‘அந்த ஒப்படைப்பிலிருந்து டாடா கம்யூனிகேஷன்ஸ் அதன் பராமரிப்பில் எந்தப் பங்கையும், பொறுப்பையும் கொண்டிருக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com