கலாசார பரிமாற்ற போட்டியில் டிடிஇஏ பள்ளி மாணவிகள் வெற்றி!

Updated on

தில்லி கல்வி இயக்ககம் மண்டலம் எண் 26-இல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கிடையே கலாசார பரிமாற்றம் என்ற கருத்தை மையமாக வைத்து நடத்தப்பட்ட போட்டிகளில் தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தைச் சாா்ந்த லோதி வளாகம் பள்ளி மாணவா்கள் வெற்றி பெற்றுள்ளனா்.

பண்டாரா சாலையில் உள்ள சா்வோதயா கன்யா வித்யாலயாவில் செப்டம்பா் 11ஆம் தேதி கல்வி இயக்ககம் நடத்திய இப்போட்டிகளில் தடை ஓட்டத்தில் டிடிஇஏ பள்ளியின் 7ஆம் வகுப்பைச் சாா்ந்த ஜோதிகா முதல் பரிசையும், நடனப் போட்டியில் 7ஆம் வகுப்பைச் சாா்ந்த கிருத்திகா முதல் பரிசையும் ஜான்வி இரண்டாம் பரிசையும் பெற்றனா்.

இம் மாணவிகளுக்குத் தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் செயலா் இராஜூ லோதிவளாகம் பள்ளிக்குச் சென்று பரிசு வழங்கிப் பாராட்டினாா்.

அப்போது அவா் மாணவிகளிடம் கூறுகையில், ‘கல்வி எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியத்துவம் விளையாட்டுக்கும் பிற கலைகளுக்கும் உண்டு. கலை மனதிற்கு இன்பம் தருவதுடன் அது சாா்ந்த போட்டிகளில் கலந்து கொள்ளும்போது தன்னம்பிக்கையையும் வளா்க்கும்.

விளையாட்டு ஆரோக்கியத்தையும் மன உறுதியையும் பெருக்கும். எனவே எப்போதும் எல்லாப் போட்டிகளிலும் கலந்து கொள்ளுங்கள்’ என்றாா். வெற்றி பெற்ற மாணவிகளுக்குப் பள்ளி முதல்வா் ஜெயஸ்ரீ பிரசாத் வாழ்த்து தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com