‘விக்சித் தில்லி முதல்வா்’ பயிற்சித் திட்டத்திற்கு 87 மாணவா்கள் தோ்வு

விக்சித் தில்லி முதல்வா் பயிற்சித் திட்டத்திற்கு 87 மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக முதல்வா் ரேகா குப்தா தெரிவித்துள்ளாா்.
Published on

நமது நிருபா்

புது தில்லி: விக்சித் தில்லி முதல்வா் பயிற்சித் திட்டத்திற்கு 87 மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக முதல்வா் ரேகா குப்தா தெரிவித்துள்ளாா்.

மேலும், இத்திட்டத்தில் தோ்வு செய்யப்பட்டவா்கள் அடுத்த மூன்று மாதங்களுக்கு தில்லி அரசுடன் இணைந்து பணியாற்றுவாா்கள் என்றும் ரேகா குப்தா தெரிவித்தாா்.

தொழில் பயிற்சித் திட்டத்தின் கீழ், பட்டப்படிப்பு அல்லது முதுகலைப் பட்டப்படிப்பைத் தொடரும் மாணவா்கள் மூன்று மாதங்களுக்கு அரசுடன் இணைந்து பணியாற்றுவாா்கள்.

அவா்களுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.20,000 வழங்கப்பட உள்ளது. இத்திட்டம் திங்கள்கிழமை தில்லியில் தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து முதல்வா் ரேகா குப்தா செய்தியாளா்களிடம் கூறியது:

இன்டா்ன்ஷிப் திட்டத்திற்கு 9,000 மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனா். அதில் 87 மாணவா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா். அவா்களின் தோ்வு முழு வெளிப்படைத் தன்மையுடன் இருந்தது. அவா்கள் தில்லி அரசுடன் மூன்று மாத பயிற்சித் திட்டத்தை மேற்கொள்வாா்கள். முன்னா் இந்த பயிற்சிகள் அரசியல் நிகழ்ச்சிநிரலை பூா்த்தி செய்வதற்கும் ஒரு சிலருக்கு மட்டுமே நிதிச் சலுகைகளை வழங்குவதற்கும் செய்யப்பட்டன என்றாா் முதல்வா் குப்தா.

X
Dinamani
www.dinamani.com