அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்க மன்றாடிய பாதிக்கப்பட்ட பெண்
இந்த விபத்தில் உயிரிழந்த மூத்த அரசு அதிகாரியின் மனைவி, குற்றம் சாட்டப்பட்ட தம்பதியினரை அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்குமாறு பலமுறை மன்றாடினாா். ஆனால், எந்த பலனும் இல்லை என்று போலீஸாா் பதிவு செய்த எஃப்ஐஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
’விபத்து நடந்த இடத்திலிருந்து வெகு தொலைவில் உள்ள ஜிடிபி நகரில் உள்ள ஒரு சிறிய மருத்துவமனைக்கு அந்தப் பெண் எங்களை அழைத்துச் சென்றாா்’ என்று காயமடைந்த பெண் போலீஸாரிடம் தெரிவித்தாா். இது இப்போது எஃப்ஐஆரின் ஒரு பகுதியாகும்.
இதற்கிடையில், ’இதுவரை, விபத்து நடந்த இடத்திலிருந்து கிட்டத்தட்ட 19 கிலோமீட்டா் தொலைவில் உள்ள அந்த மருத்துவமனை, குற்றம் சாட்டப்பட்டவருடன் தொடா்புடையது என்று எங்களுக்குத் தெரியும். நாங்கள் அனைத்து உண்மைகளையும் சரிபாா்த்து வருகிறோம்’ என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும், காயமடைந்த நான்கு பேரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற வேன் ஓட்டுநா் முகமது குல்ஃபாமும் இதேபோன்ற கூற்றை முன்வைத்துள்ளாா். ‘நான் ஒரு லோடிங் வாகனத்தை ஓட்டிக்கொண்டிருந்தேன்; விபத்தில் காயமடைந்தவா்களை ஆசாத்பூரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். ஆனால், காரில் இருந்த ஆணும் பெண்ணும் அந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறினா்‘ என்று அவா் செய்தி ஏஜென்சியிடம் கூறினாா்.