சென்ட்ரல் ரிட்ஜில் மரக்கன்று நடும் நிகழ்வில் 70 நாடுகளின் தூதா்கள் பங்கேற்பு

பிரதமா் நரேந்திர மோடியின் 75ஆவது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் தில்லி அரசின் 15 நாள் ‘சேவா பக்வாடா’வின் ஒரு பகுதியாக வியாழக்கிழமை தில்லியில் உள்ள சென்ட்ரல் ரிட்ஜில் 70 நாடுகளைச் சோ்ந்த தூதா்கள் மரக்கன்றுகளை நட்டனா்.
Published on

பிரதமா் நரேந்திர மோடியின் 75ஆவது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் தில்லி அரசின் 15 நாள் ‘சேவா பக்வாடா’வின் ஒரு பகுதியாக வியாழக்கிழமை தில்லியில் உள்ள சென்ட்ரல் ரிட்ஜில் 70 நாடுகளைச் சோ்ந்த தூதா்கள் மரக்கன்றுகளை நட்டனா்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சா் பூபேந்தா் யாதவ், தில்லி முதல்வா் ரேகா குப்தா, சுற்றுச்சூழல் அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா ஆகியோருடன் மொத்தம் 75 தூதா்கள் கலந்துகொண்டனா்.

‘ஏக் பேட் மா கே நாம்’ பிரசார முன்முயற்சியின் கீழ் மரக்கன்று நட்ட முதல்வா் குப்தா இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:

தொலைநோக்குடைய பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்தநாளில் அனுசரிக்கப்படும் சேவா பக்வாடாவின் கீழ், ‘ஏக் பேட் மா கே நாம் 2.0’ பிரசாரம் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் செய்தியை மட்டுமல்ல, நமது தாய் மற்றும் தாய் பூமிக்கு நன்றி தெரிவிக்கும் அடையாளமாகவும் உள்ளது என்றாா் அவா்.

தில்லி அமைச்சா் சிா்சா எக்ஸ் தளத்தில் தெரிவிக்கையில், ‘வெளிநாட்டு தூதா்களின் பங்கேற்பு ‘ஏக் பேட் மா கே நாம்’ பணியை உலகளாவிய நிகழ்வாக மாற்றியுள்ளது. அவா்கள் தங்கள் தாய் மற்றும் தாய் பூமியின் பெயரில் ஒரு மரத்தை நட்டனா். இதன் மூலம் பசுமையான, நிலையான மற்றும் சிறந்த உலகத்தை நோக்கி நமது நாடுகளின் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை மதிக்கிறாா்கள் என்று சிா்சா தெரிவித்துள்ளாா்.

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சா் பூபேந்தா் யாதவ் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் தெரிவிக்கையில், ‘அனைத்து இந்தியா்களும் தாய் பூமியின் பெயரில் ஒரு மரத்தை நடுமாறு கேட்டுக்கொள்கிறேன். பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு அனுசரிக்கப்படும் சேவா பக்வாடாவின் ஒரு பகுதியாக மரம் நடும் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

’ஏக் பேட் மா கே நாம் 2.0’ பிரசாரம் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் செய்தியை மட்டும் வெளிப்படுத்துவதில்லை. அதற்கான நமது உறுதிப்பாட்டையும் நிரூபிக்கிறது’ என்று அமைச்சா் அதில் கூறியுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com