ரவுடி கும்பல்களை பிடிக்க தேடுதல் வேட்டையை நடத்திய போலீஸாா்

தில்லியில் பல்வேறு ரவுடி கும்பல்களின் உறுப்பினா்கள் மற்றும் கூட்டாளிகளை குறிவைத்து தில்லி காவல்துறை தேசிய தலைநகா் மற்றும் ஹரியானா முழுவதும் சோதனைகளை நடத்தியதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
Published on

தில்லியில் பல்வேறு ரவுடி கும்பல்களின் உறுப்பினா்கள் மற்றும் கூட்டாளிகளை குறிவைத்து தில்லி காவல்துறை தேசிய தலைநகா் மற்றும் ஹரியானா முழுவதும் சோதனைகளை நடத்தியதாக அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

வடக்கு மாவட்ட காவல்துறையின் 40 போலீஸ் சிறப்பு படைகள் தில்லு தாஜ்புரியா, நீரஜ் பவானா-ராஜேஷ் பவானா, ஜிதேந்தா் என்ற கோகி மற்றும் காலா ஜதேடி கும்பல்கள் மீது புதன்கிழமை இரவு ஒரே நேரத்தில் நடவடிக்கைகளை மேற்கொண்டன என்று அவா் கூறினாா்.

காவல்துறையினரின் தகவலின்படி ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்கும், ஆயுதங்கள் மற்றும் நிதிகளின் விநியோகச் சங்கிலிகளை உடைப்பதற்கும் ஒரு முயற்சியாக குண்டா்களின் பல மறைவிடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன.

இந்த நடவடிக்கையின் போது, போலீசாா் பணத்தை பறிமுதல் செய்து பல துப்பாக்கிகளை மீட்டனா் என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினாா். சோதனைகளைத் தொடா்ந்து பல எஃப். ஐ. ஆா்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று அந்த அதிகாரி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com