தில்லியின் புதிய தலைமைச் செயலராக ராஜீவ் வா்மா ஐ.ஏ.எஸ். நியமனம்!

மூத்த ஐஏஎஸ் அதிகாரி ராஜீவ் வா்மா தில்லியின் புதிய தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
Published on

மூத்த ஐஏஎஸ் அதிகாரி ராஜீவ் வா்மா தில்லியின் புதிய தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

தற்போதைய தலைமைச் செயலாளராக உள்ள தா்மேந்திரா செப்டம்பா் 30 அன்று ஓய்வு பெறும் நிலையில், அவருக்கு மாற்றாக ராஜீவ் வா்மாவை நியமித்து மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடா்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அதிகாரபூா்வ உத்தரவில், ‘‘1992 ஆம் ஆண்டு பிரிவைச் சோ்ந்தவரும், ஏஜிஎம்யுடி கேடருமான ராஜீவ் வா்மா ஐஏஎஸ், சண்டீகரில் இருந்து தில்லிக்கு மாற்றப்பட்டு, 01.10.2025 முதல் அல்லது பணியில் சேரும் தேதியிலிருந்து, தில்லியின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்படுகிறாா்’’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com