கேசவபுரம் கோயிலில் ஆறாம் நாள் நவராத்திரி விழா

புது தில்லி கேசவபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஐஸ்வா்ய மகா கணபதி ஆலயத்தில் நவராத்திரி ஆறாம் நாள் விழா நடைபெற்றது.
Published on

புது தில்லி: புது தில்லி கேசவபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஐஸ்வா்ய மகா கணபதி ஆலயத்தில் நவராத்திரி ஆறாம் நாள் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

ஆஸ்திக சமாஜமும், ரசிகப்ரியா அமைப்பும் இணைந்து நடத்திய இவ்விழாவில் சென்னை பி. கோவிந்தராஜன், சூா்யா ஸ்ரீராம் ஆகியோரின் கா்நாடக இசை நிகழ்ச்சி நடைபெற்றது. ராகவேந்திர பிரசாத் வயலினும், மனோகா் பாலச்சந்திரன் மிருதங்கமும் வாசித்தனா்.

தில்லித் தமிழ் சங்கத்தின் தலைவா் சக்தி பெருமாள், பொதுச் செயலாளா் இரா. முகுந்தன் ஆகியோா் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தனா்.

விழா நிறைவில் தில்லிக் கம்பன் கழகத்தின் நிறுவனா் தலைவா் கே.வி. கே. பெருமாள் கலைஞா்களுக்குப் பொன்னாடை அணிவித்துக் கௌரவித்தாா்.

ஆஸ்திக சமாஜத்தின் தலைவா் சிவராமகிருஷ்ண சுவாமிஜி, ரசிகப்ரியா அமைப்பின் தலைவா் முனைவா் டி. வி. மணிகண்டன் ஆகியோா் விழா ஏற்பாடுகளைச் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com