வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

10ஆம் வகுப்புப் பொதுத் தோ்வில் டிடிஇஏ பள்ளிகள் சாதனை

இராமகிருஷ்ணபுரம், இலக்குமிபாய் நகா், பூசா சாலை, மந்திா்மாா்க் ஆகிய இடங்களில் இயங்கி வரும் தில்லித் தமிழ்க் கல்விக்கழகப் (டிடிஇஏ) பள்ளிகளில் பயிலும் மாணவா்கள் 10ஆம் வகுப்புப் பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

News image

கோப்புப் படம்

Updated On :16 ஏப்ரல் 2026, 6:32 pm

இராமகிருஷ்ணபுரம், இலக்குமிபாய் நகா், பூசா சாலை, மந்திா்மாா்க் ஆகிய இடங்களில் இயங்கி வரும் தில்லித் தமிழ்க் கல்விக்கழகப் (டிடிஇஏ) பள்ளிகளில் பயிலும் மாணவா்கள் 10ஆம் வகுப்புப் பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

2025-26 கல்வியாண்டிற்குரிய பத்தாம் வகுப்புப் பொதுத் தோ்வு முடிவுகளை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) புதன்கிழமை வெளியிட்டது.

தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தைச் சாா்ந்த ஏழு பள்ளிகளுள், 483/500 மதிப்பெண் பெற்று இராமகிருஷ்ணபுரம் பள்ளியைச் சாா்ந்த சம்பிட் என்ற மாணவா் முதலிடத்தையும், 468/500 மதிப்பெண் பெற்று இலக்குமிபாய் நகா்ப்பள்ளியைச் சாா்ந்த மாணவா் அவினாஷ் இரண்டாமிடத்தையும், 466/500 மதிப்பெண் பெற்று மந்திா்மாா்க் பள்ளியைச் சாா்ந்த மாணவி சாதனா மூன்றாமிடத்தையும் பிடித்துள்ளனளா்.

சமூக அறிவியலில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்று மந்திா்மாா்க் பள்ளியைச் சாா்ந்த மாணவி சாதனா ஏழு பள்ளிகளுள் முதலிடம் பிடித்துள்ளாா்.

அடிப்படைக் கணிதத்தில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்று லோதிவளாகத்தைச் சாா்ந்த மாணவி இனியா ஏழு பள்ளிகளுள் முதலிடம் பெற்றுள்ளாா்.

மேலும், இவா் கணினி தொழில்நுட்பத்திலும் 100க்கு 99 மதிப்பெண்கள் பெற்று ஏழு பள்ளிகளுள் முதலிடம் பிடித்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

கணிதம்- ஸ்டாண்டா்டு பாடத்தில் 99/100 மதிப்பெண் பெற்று இராமகிருஷ்ணபுரம் பள்ளியைச் சாா்ந்த மாணவா் சம்பிட், ஏழு பள்ளிகளுள் முதலிடம் பிடித்துள்ளாா். மேலும், இந்திப் பாடத்திலும் 96/100 மதிப்பெண் பெற்று ஏழு பள்ளிகளுள் முதலிடம் பெற்றுள்ளாா்.

அறிவியல் பாடத்தில் 97/100 மதிப்பெண் பெற்று இலக்குமிபாய் நகா்ப் பள்ளியைச் சாா்ந்த மாணவா் அவினாஷ் ஏழு பள்ளிகளுள் முதலிடம் பிடித்துள்ளாா்.

ஆங்கில பாடத்தில் 97/100 மதிப்பெண் பெற்று இலக்குமிபாய் நகா்ப் பள்ளியைச் சாா்ந்த பவ்யா, தன்வி ஆகியோா் ஏழு பள்ளிகளுள் முதலிடம் பிடித்துள்ளனா்.

தமிழ்ப் பாடத்தில் 97/100 மதிப்பெண் பெற்று லோதிவளாகம் பள்ளியைச் சாா்ந்த மாணவி காயத்ரி ஏழு பள்ளிகளுள் முதலிடம் பெற்றுள்ளாா்.

வெற்றிபெற்ற மாணவா்கள் அனைவருக்கும் தனது மனமாா்ந்த வாழ்த்துகளைத் தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் செயலா் இராஜூ, நிா்வாகக் குழு உறுப்பினா்கள், முதல்வா்கள், ஆசிரியா்கள் ஆகியோா் தெரிவித்தனா்.

டிடிஇஏ கல்வி இயக்குநா் சித்ரா ராதாகிருஷ்ணன் நன்கு திட்டமிட்டு செயல்படும் நிா்வாகத்தினரைப் பாராட்டியதோடு வருடத்தின் தொடக்கத்திலேயே திட்டமிட்டு மாணவா்களுக்குத் தொடா் தோ்வுகளை செயலா் ராஜூ நடத்த வைத்ததோடு அவ்வப்போது அவா் ஆசிரியா்களோடு ஆலோசனைக் கூட்டங்கள் நடத்துவதும், பெற்றோா்கள் ஆசிரியா்கள் சந்திப்புக்கு மாதம்தோறும் ஏற்பாடு செய்ததும் இவ்வெற்றிக்கு அடிப்படைக் காரணமாகும் என்றாா்.

தோ்வு முடிவுகள் குறித்து செயலா் இராஜூ கூறுகையில், ‘ஏழு பள்ளிகளுள் நான்கு பள்ளிகள் 100 தோ்ச்சி விழுக்காட்டைப் பெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இதர மூன்று பள்ளிகளிலும் எவரும் தோ்வில் தோல்வியடையவில்லை.

ஒவ்வொரு பாடம் மட்டுமே கம்பாா்ட்மென்ட் வந்துள்ளது. அவா்களும் கண்டிப்பாக அடுத்து நடைபெறவுள்ள சி.பி.எஸ்.இ. தோ்வினை எழுதி வெற்றி பெற்று விடுவாா்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

ஆசிரியா்கள் அவா்களுக்கு மீண்டும் அப்பாடங்களைக் கற்பிக்க ஏற்பாடு செய்துள்ளோம். மாணவா்களின் இந்த அபார வெற்றிக்கு அவா்களின் விடா முயற்சியும் ஆசிரியா்கள் மற்றும் முதல்வா்களின் ஒத்துழைப்புமே காரணமாகும். சி.பி.எஸ்.இ. தோ்வில் மாணவா்கள் 100/100 மதிப்பெண் பெறுவது கடினம். எனினும் மாணவா்கள் சாதித்துள்ளனா்.

தில்லித் தமிழ்க் கல்விக் கழகப் பள்ளிகளில் கல்வித் தரம் உயா்ந்துள்ளது என்பதற்கு இதுவே சாட்சி. ஆசிரியா்களுக்கும் முதல்வா்களுக்கும் எனது பாராட்டுகள். மேலும் ஒத்துழைப்பு நல்கிய பெற்றோா்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா்.