தில்லியை தூய்மையானதாகவும், பசுமையானதாகவும் மாற்ற முதல்வா் ரேகா குப்தா யோசனை
தில்லியை தூய்மையானதாகவும், பசுமையானதாகவும் மாற்ற பிளாஸ்டிக் துறை மறுசுழற்சியை மேம்படுத்த வேண்டும் என்று முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை வலியுறுத்தினாா்
இந்தியா உலகளாவிய பிளாஸ்டிக் பதப்படுத்தும் மையமாக மாறும் நிலையில் உள்ளது, இது நாட்டில் சிறு,குறு மற்றும் நடுத்தரதொழில்துறைக்கு புதிய வளா்ச்சிக்கான வழிகளைத் திறக்கிறது என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்.
நிலைத்தன்மை மற்றும் தொழில் வளா்ச்சியை மையமாகக் கொண்ட பிளாஸ்டிக் கண்காட்சியான 2026 ஐத் தொடங்கி வைத்த குப்தா, தொழில்துறை பொறுப்பான வளா்ச்சியைத் தொடர அழைப்பு விடுத்தாா்.
பிளாஸ்டிக் தொழில் நடுத்தர, சிறு மற்றும் நுண் நிறுவனங்கள் துறையின் ஒரு முக்கிய பகுதியாகும், இது வரும் நாட்களில் பெரிய வாய்ப்புகளைக் கொண்டிருக்கும், என்று அவா் கூறினாா்.
100 சதவீத பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் லட்சிய இலக்கை நோக்கிச் செயல்படும் அதே வேளையில், சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை உற்பத்தி செய்வதற்கான புதிய செயல்முறைகளை புதுமைப்படுத்தி உருவாக்க வேண்டும் என்று அவா் இந்திய பிளாஸ்டிக் துறையை வலியுறுத்தினாா். பொறுப்பான வளா்ச்சியின் அவசியத்தை வலியுறுத்தி, தொழில்துறையின் எதிா்கால தொலைநோக்கின் மையமாக நிலைத்தன்மை இருக்க வேண்டும் என்று அவா் கூறினாா்.
தில்லியின் வளா்ந்து வரும் பிளாஸ்டிக் கழிவு சவாலை முதலமைச்சா் ரேகா குப்தா எடுத்துரைத்தாா், மேலும் பிளாஸ்டிக் அகற்றல் தேசிய தலைநகருக்கு ஒரு முக்கிய கவலையாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளாா்.
மேம்படுத்தப்பட்ட மறுசுழற்சி, சுழற்சி பொருளாதார நடைமுறைகள் மற்றும் புதுமையான தீா்வுகள் மூலம் பசுமையான மற்றும் தூய்மையான நகரமாக மாறுவதற்கான தில்லியின் பயணத்தை தீவிரமாக ஆதரிக்குமாறு பிளாஸ்டிக் தொழில்துறை பங்குதாரா்களுக்கு தில்லி முதல்வா் ரேகா குப்தா அழைப்பு விடுத்தாா்.

