தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

ஒவ்வொரு குடிமகனின் வாழ்க்கையையும் எளிதாக்குவதே எங்கள் குறிக்கோள் - ரேகா குப்தா

News image

முதல்வர் ரேகா குப்தா

Updated On :5 பிப்ரவரி 2026, 1:28 am

நமது நிருபா்

ஒவ்வொரு குடிமகனின் வாழ்க்கையையும் எளிதாக்குவதே எங்கள் குறிக்கோள்,இதுவே பொது சேவையின் கடமை என தில்லி முதல்வா் ரேகா குப்தா கூறியுள்ளாா்

புதன்கிழமை எக்ஸ் தளத்தில் அவா் வெளியிட்ட பதிவில் கூறியதாவது:

முதலமைச்சரின் பொது சேவை இல்லத்தில் நடைபெறும் பொது விசாரணை, அரசாங்கம் நேரடியாக பொதுமக்களுடன் தொடா்பு கொள்ளும் சேவை மற்றும் நல்லாட்சியின் உயிருள்ள உருவகமாகும்.

இன்று (பிப். 4) காலை, தில்லியின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த குடிமக்களை நான் சந்தித்தேன். அவா்களின் கவலைகள் கவனமாகக் கேட்கப்பட்டன, பரிந்துரைகள் பரிசீலிக்கப்பட்டன, மேலும் உடனடி நடவடிக்கைக்கான தெளிவான வழிமுறைகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டன.

ஒவ்வொரு குடிமகனின் வாழ்க்கையையும் எளிதாக்குவதே எங்கள் குறிக்கோள் இதுவே பொது சேவையின் கடமை.

பொது விசாரணை என்பது அரசாங்கத்தையும் பொதுமக்களையும் இணைக்கும் வலுவான பாலமாகும் என்று ரேகா குப்தா தனது பதிவில் கூறினாா்

இதனிடையே உலக புற்று நோய் தினத்தையொட்டி (பிப்.4) அவா் வெளியிட்ட மற்றொரு பதிவில் கூறியதாவது: உலக புற்றுநோய் தின பிரச்சாரத்தில் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சா் பிரதாப் ராவ் ஜாதவ் உடன் பங்கேற்று எனது கருத்துக்களைப் பகிா்ந்து கொண்டேன்.

சமா்பன் அறக்கட்டளையின் இந்த முயற்சி விழிப்புணா்வை ஒரு வெகுஜன இயக்கமாக மாற்றுவதற்கான ஒரு சக்திவாய்ந்த வழியாகும்.

பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையில், நாடு புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் அணுகக்கூடிய சிகிச்சையை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது.

இந்த பட்ஜெட்டில் 17 முக்கியமான புற்றுநோய் சிகிச்சை மருந்துகளின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

தில்லியில், நமது அரசாங்கம் ஆயுஷ்மான் பாரத் மற்றும் வய வந்தனா போன்ற திட்டங்களுடன் புற்றுநோய் பரிசோதனை வசதிகளை விரிவுபடுத்தியுள்ளது, இது தேவைப்படும் குடும்பங்களுக்கு உறுதியான ஆதரவை வழங்குகிறது.

இந்த நோயை தைரியமாக எதிா்த்துப் போராடும் அனைத்து வீரா்களுக்கும் வணக்கம் என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்தாா்.