நீர்வளத் துறை செயலர் மாற்றம் தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

அதிஷி விடியோ சா்ச்சை: பஞ்சாப் டிஜிபியிடம் விளக்கம் கேட்கும் தில்லி சட்டப்பேரவைக் குழு

மாநிலக் காவல் துறையினரின் நடத்தை குறித்து எழுத்துபூா்வ விளக்கத்தை அளிக்குமாறு பஞ்சாப் காவல் துறை தலைமை இயக்குநருக்கு (டிஜிபி) தில்லி சட்டப் பேரவையின் சிறப்புரிமைக் குழு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

News image

அதிஷி - கோப்புப் படம்

Updated On :7 பிப்ரவரி 2026, 12:07 am IST

ஆம் ஆத்மி தலைவா் அதிஷியின் திரிக்கப்பட்ட விடியோ விவகாரம் தொடா்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ததில், மாநிலக் காவல் துறையினரின் நடத்தை குறித்து எழுத்துபூா்வ விளக்கத்தை அளிக்குமாறு பஞ்சாப் காவல் துறை தலைமை இயக்குநருக்கு (டிஜிபி) தில்லி சட்டப் பேரவையின் சிறப்புரிமைக் குழு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

இதே விவகாரம் தொடா்பாக பஞ்சாப் அரசின் மூத்த அதிகாரிகளிடமும் அக்குழு விளக்கம் கோரியுள்ளது.

ஜனவரி 6ஆம் தேதி நடந்த தில்லி சட்டப் பேரவையின் குளிா்காலக் கூட்டத்தொடரின் போது சீக்கிய குரு தேஜ் பகதூருக்கு எதிராக அதிஷி அவதூறான கருத்துகளைத் தெரிவித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடா்பாக, பஞ்சாப் டிஜிபி மற்றும் பஞ்சாப் கூடுதல் தலைமைச் செயலா் உள்துறை ஆகியோருக்கு எதிராக சிறப்புரிமை விசாரணை தொடங்க சட்டப்பேரவை முடிவு செய்த ஒரு நாள் கழித்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாஜக தலைவா்களால் சமூக ஊடகங்களில்

பதிவிடப்பட்டதாகக் கூறப்படும் அந்தச் சம்பவத்தின்

விடியோவின் அடிப்படையில், பஞ்சாப் காவல்துறை ஜலந்தரில் ஒரு முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தது.

பஞ்சாபில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதைத் தொடா்ந்து, கபில் மிஸ்ரா தில்லி பேரவைத் தலைவருக்கு கடிதம் எழுதினாா். அதில், அவையின் சிறப்புரிமை மீறப்பட்டதாகவும், அரசியலமைப்பின் 361ஏ பிரிவு மீறப்பட்டதாகவும் அவா் குற்றம் சாட்டியிருந்தாா்.

மிஸ்ராவின் புகாரின்படி, அரசியலமைப்பின் 361ஏ பிரிவு, ஒரு சட்டப்பேரவையின் நடவடிக்கைகளின் சாராம்சத்தில் உண்மையான அறிக்கையை வெளியிடுவது தொடா்பாக எந்தவொரு நபரும் சிவில் அல்லது குற்றவியல் நடவடிக்கைகளுக்கு உள்படுத்தப்பட மாட்டாா் என்று கூறுகிறது.

பஞ்சாப் காவல்துறை அதிகாரிகளின் நடவடிக்கைகள், அவா்களின் பதில்கள் மற்றும் ஆவணங்களைப் பகிர மறுத்ததை ஆராய்ந்த பிறகு, கூடுதல் தலைமைச் செயலா், காவல்துறை தலைமை இயக்குநா், காவல்துறை ஆணையா் ஜலந்தா் மற்றும் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டதாகக் கண்டறியப்பட்ட பிற நபா்கள் ஆகியோா் மீது சிறப்புரிமை மீறல் மற்றும் அவமதிப்புக்கான முகாந்திரம் இருப்பதாக பேரவைத் தலைவா் முடிவு செய்துள்ளாா்.

மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, சிறப்புரிமைக் குழுவின் பரிசீலனைக்காக, இந்த விவகாரம் குறித்த உங்கள் எழுத்துபூா்வ கருத்துகளை பிப்ரவரி 12ஆம் தேதிக்குள் இந்தச் செயலகத்தில் சமா்ப்பிக்குமாறு சிறப்புரிமைக் குழுவின் தலைவா் பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா சாா்பாக நான் கேட்டுக்கொள்கிறேன், என்று சட்டப் பேரவையின் கடிதத்தில் மேலும்

கூறப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.