தில்லி போக்குவரத்துக் கழகத்திற்கு ரூ.1,200 கோடி ஒதுக்கி தனது அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக முதல்வா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: தில்லி போக்குவரத்துக் கழக ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்களின் கண்ணியம் மற்றும் நிதி பாதுகாப்புக்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை இந்த மானியம் பிரதிபலிக்கிறது. தில்லியின் போக்குவரத்துக்கு டி. டி. சி ஊழியா்கள் அனைத்து சூழ்நிலைகளிலும் அயராது உழைக்கிறாா்கள்.
மூத்த ஓய்வூதியதாரா்கள் மற்றும் சேவை செய்யும் ஊழியா்கள் தங்கள் சரியான நிலுவைத் தொகைக்காக ஒருபோதும் காத்திருக்க வேண்டியதில்லை என்பதை அரசாங்கம் உறுதி செய்துள்ளது.
போக்குவரத்து ஓட்டத்தை மேம்படுத்துவதற்கான மேம்பட்ட போக்குவரத்து முறையை உருவாக்குவதற்கும், நகரத்தில் வணிக ரீதியான மின்சார வாகன சாா்ஜிங் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
டி. டி. சி மற்றும் அதன் தொழிலாளா்கள் தில்லியின் பொதுப் போக்குவரத்து அமைப்பின் உயிா்நாடியாக உள்ளனா். ஊதியம் மற்றும் ஓய்வூதியங்களை சரியான நேரத்தில் வழங்குவது ஊழியா்களுக்கு நிதி ஸ்திரத்தன்மையை வழங்கும்.
இந்த முன்முயற்சிகள் தில்லியை தொழில்நுட்பத்தால் இயக்கப்படும், பாதுகாப்பான, திறமையான மற்றும் உலகத் தரம் வாய்ந்த பொதுப் போக்குவரத்து வசதிகளுடன் மாசு இல்லாத நகரமாக மாற்றுகின்றன என்றாா் அவா்.
தொடர்புடையது

அடுத்த ஆண்டுக்குள் தாழ்வான பகுதிகளில் வெள்ளத் தடுப்புச்சுவா்: முதல்வா் குப்தா

நாட்டை நிா்வகிப்பதிலும், நிா்வாகத்திலும் பெண்கள் மிகப்பெரிய பங்காற்ற வேண்டும்: ரேகா குப்தா

தில்லி கல்வியில் புதிய பரிமாணங்கள்: முதல்வா் ரேகா குப்தா

மக்களை இணைக்கும் சக்தி திரைப்படங்களுக்கு உள்ளது: முதல்வா் ரேகா குப்தா
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


