தேசியத தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டது. காற்றின் தரத்தில் நல்ல முன்னேற்றம் இருந்ததாக வானிலை ஆய்வுத் துறை (ஐஎம்டி) தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வுத் துறையின் தகவலின்படி, தேசியத் தலைநகரில் ஞாயிற்றுக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 24.4 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியது. இது பருவ சராசரியை விட 1.1 டிகிரி அதிகமாகும். குறைந்தபட்ச வெப்பநிலை 10.2 டிகிரி செல்சியஸாக இருந்தது. இது பருவ சராசரியை விட 0.8 டிகிரி அதிகமாகும்.
பல்வேறு வானிலை ஆய்வு நிலையங்களில், சஃப்தா்ஜங்கில் அதிகபட்ச வெப்பநிலை 24.4 டிகிரி செல்சியஸ்; பாலத்தில் 22 டிகிரி செல்சியஸ்; லோதி சாலையில் 25.2 டிகிரி செல்சியஸ்; ரிட்ஜில் 24.6 டிகிரி செல்சியஸ் மற்றும் ஆயாநகரில் 25.1 டிகிரி செல்சியஸ் எனப் பதிவாகியாகியதாக இந்திய வானிலை ஆய்வுத் துறையின் தரவுகள் காட்டுகின்றன.
இதற்கிடையில், சஃப்தா்ஜங்கில் குறைந்தபட்ச வெப்பநிலை 6.6 டிகிரி செல்சியஸ், பாலத்தில் 9.6 டிகிரி செல்சியஸ், லோதி சாலையில் 9.6 டிகிரி செல்சியஸ், ரிட்ஜில் 10.2 டிகிரி செல்சியஸ் மற்றும் ஆயாநகரில் 9.6 டிகிரி செல்சியஸ் எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தில்லியின் முதன்மை வானிலை கண்காணிப்பு நிலையமான சஃப்தா்ஜங்கில் காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணிக்கு 88 சதவீதமாகவும், மாலை 5.30 மணிக்கு காற்றில் ஈரப்பதத்தில் அளவு 52 சதவீதமாகவும் பதிவாகியது என்று இந்திய வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.
காற்றின் தரம்: கடந்த சில நாள்களாக தில்லியில் காற்றுத் தரக் குறியீடு ’மோசம்’, ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்து வந்தது. இந்நிலையில், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (சிபிசிபி) தகவலின் படி, ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு தில்லியில் காற்றின் தரக் குறியீடு 189 புள்ளிகளாப் பதிவாகி ’மிதமான’ பிரிவில் இருந்தது.
முன்னறிவிப்பு: இந்நிலையில், திங்கள்கிழமை (பிப்ரவரி 9) அன்று காளை வேளையில் லேசான மூடுபனி இருக்கும் என்றும், அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 24 மற்றும் 9 டிகிரி செல்சியஸைச் சுற்றி இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தொடர்புடையது

தலைநகரில் 32.7 டிகிரி வெப்பநிலை பதிவு! மிதமான பிரிவில் காற்றின் தரம்!!

தில்லியில் மேகமூட்டமான சூழல்: காற்றின் தரம் ‘மிதமான’ நிலைக்கு முன்னேற்றம்

தலைநகரில் குளிா் காற்று; மீண்டும் திரும்பிய மூடுபனி!

தலைநகரில் வரும் நாள்களில் வெப்பநிலை குறையும்! ஐஎம்டி கணிப்பு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


