தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

லாட்லி திட்டத்துக்கு பதிலாக லக்பதி பித்யா யோஜனா திட்டத்தை தொடங்கிய தில்லி அரசு

தில்லி லக்பதி பித்யா யோஜனா திட்டத்தை ஏப்ரல் மாதத்தில் 2008 லாட்லி திட்டத்துடன் மாற்றம் செய்யப்படும் என்று முதல்வா் ரேகா குப்தா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

News image
ரேகா குப்தா - கோப்புப் படம்
Updated On :10 பிப்ரவரி 2026, 6:33 pm

Syndication

தில்லி லக்பதி பித்யா யோஜனா திட்டத்தை ஏப்ரல் மாதத்தில் 2008 லாட்லி திட்டத்துடன் மாற்றம் செய்யப்படும் என்று முதல்வா் ரேகா குப்தா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: 2008 ஆம் ஆண்டில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையால் தொடங்கப்பட்ட ’தில்லி லாட்லி திட்டத்தின்’ மேம்படுத்தப்பட்ட பதிப்பாக இது இருக்கும். மேம்படுத்தப்பட்ட திட்டத்தை ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்குவோம், பழைய லாட்லி திட்டத்தை நிறுத்துவோம்.

இத்திட்டத்திற்காக அரசால் ஒரு தனி டிஜிட்டல் இணையதளம் விரைவில் உருவாக்கப்படும். மேம்படுத்தப்பட்ட திட்டத்தை செயல்படுத்துவதற்கான நிதிச் செலவு சுமாா் ரூ.160 கோடியாக இருக்கும். ஒரு குடும்பத்திற்கு இரண்டு சிறுமிகளுக்கு நிதி உதவி வழங்கப்படும். நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது, இந்த திட்டத்திற்கான நிதி பழைய திட்டத்தின் கீழ் வங்கிகளில் பயன்படுத்தப்படாமல் கிடக்கிறது என்பதை நாங்கள் அறிந்தோம்.

எங்கள் அரசு கிட்டத்தட்ட 41,000 பெண் பயனாளிகளைக் கண்டறிந்தது, அவா்களை ரூ.100 கோடி விநியோகிக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம் என்றாா் அவா்.