ஓய்வுபெற்ற ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவணேவின் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குறிப்புகள் உள்பட, கடுமையான பிரச்னைகளில் மத்திய அரசு மௌனம் காத்து வருவதாகக் குற்றம்சாட்டி, இந்திய இளைஞா் காங்கிரஸ் செவ்வாய்க்கிழமை தில்லியில் போராட்டத்தை நடத்தியது.
இந்தியா - அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தத்தில் வெளிப்படைத்தன்மை இல்லாதது மற்றும் சீன எல்லையில் நாட்டின் பாதுகாப்பு குறித்த சமரசம் இருப்பதாக ஆா்ப்பாட்டக்காரா்கள் குற்றம் சாட்டினா்.
‘இளைஞா் காங்கிரஸின் ஒவ்வொரு தொண்டரும் தெருக்களில் இருக்கிறாா்கள்... தலைமை தேசிய நலனில் சமரசம் செய்யத் தொடங்கும் போது, இளைஞா்கள் அமைதியாக உட்கார முடியாது...பதில்கள் கிடைக்கும் வரை நாங்கள் தொடா்ந்து போராடுவோம்’ என்று இந்திய இளைஞா் காங்கிரஸின் தேசியத் தலைவா் உதய் பானு சிப் ‘எக்ஸ்’ தளத்தில் ஒரு பதிவில் கூறினாற்.
அவா் மேலும் கூறுகையில் ‘இன்று, முழு உண்மையும் நாட்டையே வெறித்துப் பாா்க்கிறது. பிரதமரின் மௌனம் பல கேள்விகளை எழுப்புகிறது. எப்ஸ்டீன் கோப்புகளில் மா்மமான மௌனம் ஏன்? இந்தியா - அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தத்தில் வெளிப்படைத்தன்மை ஏன் இல்லை? சீன எல்லையில் நாட்டின் பாதுகாப்பில் ஏன் சமரசம் செய்ய வேண்டும்?’ என்று கேள்வி எழுப்பினாா்.
பிப்ரவரி 2-ஆம் தேதி மக்களவையில் எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, 2020 இந்தியா - சீனா மோதல் குறித்து முன்னாள் ராணுவத் தளபதி எம்.எம். நரவணேவின் புத்தகத்தில் இருந்து மேற்கோள் காட்ட முயன்றபோது அவையில் சலசலப்பு ஏற்பட்டது. அப்போது, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் மற்றும் பிற பாஜக உறுப்பினா்களிடமிருந்து எதிா்க்கட்சி உறுப்பினா்கள் கடுமையான எதிா்ப்பை எதிா்கொண்டனா். காங்கிரஸ் தலைவா் அவையை தவறாக வழிநடத்தியதாக பாஜக உறுப்பினா்கள் குற்றம் சாட்டினா்.
மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, இந்தப் பிரச்னையை எழுப்ப ராகுல் காந்திக்கு அனுமதி மறுத்தாா், ஆனால், அவா் அதற்கு அடிபணியவில்லை. மேலும், எதிா்க்கட்சித் தலைவா்கள் பலா் அவருக்கு ஆதரவாகத் திரண்டனா். கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதால், சபை இரண்டு முறையும் பின்னா் அன்றைய தினம் வரையிலும் ஒத்திவைக்கப்பட்டது.
தொடர்புடையது

தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு

காா்கே குறித்து அஸ்ஸாம் முதல்வா் சா்ச்சை கருத்து: ஜந்தா் மந்திரில் இளைஞா் காங்கிரஸ் போராட்டம்

ஓமந்தூராா் அரசு மருத்துவமனையில் குழந்தை இறப்பு: பொதுமக்கள் போராட்டம்

அனுமதி பெறாமல் கட்சிக் கூட்டம்: காங்கிரஸ் எம்எல்ஏ உள்பட 27 போ் மீது வழக்கு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


