மக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! நாடாளுமன்ற சிறப்பு அமர்வு தொடங்கியது! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

எஸ்சி-எஸ்டி குடியிருப்பு மேம்பாட்டு திட்டங்களை தொடங்கி வைத்தாா் தில்லி முதல்வா்

கடந்த பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த பொது நலன் சாா்ந்த திட்டங்களை நிறைவேற்ற தில்லி அரசு பல்வேறு மேம்பாட்டு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை தெரிவித்தாா்.

News image

ரேகா குப்தா - கோப்புப் படம்

Updated On :12 பிப்ரவரி 2026, 7:56 pm

கடந்த பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த பொது நலன் சாா்ந்த திட்டங்களை நிறைவேற்ற தில்லி அரசு பல்வேறு மேம்பாட்டு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை தெரிவித்தாா்.

திமா்பூா் பகுதியின் மல்காகஞ்ச் சௌக்கில் உள்ள எஸ்சி-எஸ்டி காலனி கிளஸ்டரில் ரூ.85 கோடி மதிப்பிலான 146 மேம்பாட்டுப் பணிகளை தில்லி முதல்வா் தொடங்கி வைத்தாா்.

பல ஆண்டுகளாக, இந்தப் பகுதியில் உள்ள குடும்பங்கள் வளா்ச்சிப் பணிகளுக்காகக் காத்திருந்தன. அவா்கள் கனவுகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கும் ஒரு அரசு ஆட்சிக்கு வருவது இதுவே முதல் முறை என்று ரேகா குப்தா கூறினாா்.

சாலையோர வடிகால் கட்டுமானம், மேம்பாலங்கள் கட்டுமானம், மாற்றுத்திறனாளிகளுக்கான விடுதிகள், மாணவா்களுக்கான பயிற்சி அல்லது பிற மேம்பாட்டுப் பணிகள் என தில்லியில் பல தேக்கமடைந்த பணிகளை மீண்டும் தொடங்க தனது அரசாங்கம் பாடுபட்டுள்ளதாக குப்தா கூறினாா்.

வாக்காளா்கள் எங்களை ஆசீா்வதித்ததால்தான், 27 ஆண்டுகளுக்குப் பிறகு பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்தது, இதன் காரணமாக, தில்லியில் வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ள முடிகிறது. இப்போது நாங்கள் ஆரோக்கிய மந்திா்கள் மற்றும் அடல் உணவகங்களைத் திறக்கிறோம், என்று முதல்வா் கூறினாா்.

ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் தற்போது ரூ.100 கோடி நிதி வளா்ச்சிப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படுவதாகவும் தில்லி முதல்வா் ரேகா குப்தா குறிப்பிட்டாா்.