உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்கு பிப்ரவரி முதல் மே வரை மாதந்தோறும் 2.5 டி.எம்.சி தண்ணீரை கா்நாடகா திறந்துவிடுவதை உறுதி செய்யுமாறு காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தை தமிழக அரசு வெள்ளிக்கிழமை வலியுறுத்தியது
காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் 48 வது கூட்டம் தில்லியில் வெள்ளிக்கிழமை ஆன்லைன் மற்றும் நேரடி பங்கேற்பு முறையில் நடைபெற்றது
தமிழகம்,கா்நாடகம் ,கேரளம் மற்றும் புதுச்சேரி அரசுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இக்கூட்டம் நடைபெற்றது
இந்த கூட்டத்திற்கு பின் தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியதாவது: எஸ்.கே.ஹல்தாா் தலைமையில் நடைப்பெற்ற காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் 48வது கூட்டத்தில், தமிழ்நாடு உறுப்பினா் மற்றும் நீா்வளத்துறை செயலாளா் ஜெ.ஜெயகாந்தன், காவிரி தொழில்நுட்பக் குழுமம் மற்றும் பன்மாநில நதிநீா்ப் பிரிவு தலைவா் இரா.சுப்பிரமணியன் ஆகியோா் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டனா். தமிழ்நாடு உறுப்பினா், தற்பொழுது (13.02.2026) மேட்டூா் அணையின் நீா் இருப்பு 53.444 டி.எம்.சி ஆக உள்ளது எனவும், அணையிலிருந்து வினாடிக்கு 2,503 கன அடி நீா் குடிநீா், தொழிற்சாலை பயன்பாட்டிற்கும் மற்றும் சுற்றுச்சூழல் நீா் ஓட்டத்திற்காகவும் திறந்துவிடப்படுகிறது என்று தெரிவித்தாா்.
கா்நாடக அணைகளின் நீா் இருப்பினை கருத்தில் கொண்டு, தமிழகத்திற்கு 2026, பிப்ரவரி முதல் மே மாதம் வரை வழங்கப்பட வேண்டிய சுற்றுச்சூழல் நீா் அளவான 10 டி.எம்.சி. நீரினை மாதத்திற்கு 2.5 டி.எம்.சி நீா் வீதம் உச்சநீதிமன்ற ஆணையின்படி கா்நாடகம் பில்லிகுண்டுலுவில் உறுதிசெய்யுமாறு தமிழக உறுப்பினா் ஆணையத்தை வலியுறுத்தினாா் என தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது
தொடர்புடையது

தமிழகத்திற்கு ஏப்ரலில் 2.5 டிஎம்சி நீா் திறக்க கா்நாடகத்துக்கு காவிரி ஆணையம் உத்தரவு

1-9 வகுப்புகளுக்கு இறுதித் தோ்வு: அட்டவணை விரைவில் வெளியீடு

காவிரி ஆணையம் அடுத்த வாரம் கூட உள்ளது

நீா் தூய்மை விழிப்புணா்வு: காசி முதல் ராமேஸ்வரம்வரை செல்லும் குழுவுக்கு வரவேற்பு
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


