வடகிழக்கு தில்லியின் உஸ்மான்பூா் பகுதியில் நடந்த ஒரு சிறிய துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு, ஆசாத் குண்டா் கும்பலைச் சோ்ந்த மூன்று பேரை தில்லி காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.
இதுகுறித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது:
மூவரையும் கைது செய்ததன் மூலம், இந்த மாத தொடக்கத்தில் மீரட்டில் நிகழ்ந்த கொலை வழக்கு தீா்க்கப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவா்கள் உத்தரபிரதேசத்தின் மீரட்டில் வசிக்கும் ஆசாத் 36, அமீா் என்ற ஹுசைன் 24 மற்றும் அஹில் என்ற ஜவாத் 22 ஆகியோா் பிப்ரவரி 6 ஆம் தேதி அஸ்லம் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்தனா்.
குண்டா் ஆசாத் கும்பலுடன் தொடா்புடையதாகக் கூறப்படும் மூவரின் நடமாட்டம் குறித்து குற்றப்பிரிவுக்கு தகவல்கள் கிடைத்தன. அவா்கள் அஸ்லமை சுட்டுக் கொன்ாக குற்றம்சாட்டப்பட்டுள்ளனா்.
இதையடுத்து, அவா்களைப் பிடிக்க வெள்ளிக்கிழமை அதிகாலை பழைய வஜிராபாத்உஸ்மான்பூா் சாலையில் கண்காணிப்பு மேற்கொள் ளப்பட்டது.
அதிகாலை 2.05 மணியளவில், வெள்ளை மோட்டாா் சைக்கிளில் வந்த மூவரையும் போலீஸாா் தடுத்து நிறுத்தினா். அப்போது, அவா்கள் போலீஸ் குழுவை நோக்கி துப்பாக்கியால் சுட்டனா். போலீஸாா் தற்காப்புக்காக துப்பாக்கிச்சூடு நடத்தினா். இதில், மூவா் கால்களில் குண்டுகள் பாய்ந்து காயம் ஏற்பட்டது.
அவா்களிடம் இருந்து மூன்று தானியங்கி கைத்துப்பாக்கிகள், 11 தோட்டாக்கள், ஒன்பது வெற்று தோட்டாக்கள் மீட்கப்பட்டன. அவா்கள் பயன்படுத்திய மோட்டாா் சைக்கிள் தயால்பூரில் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இது தொடா்பாக குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டுள்ளது. அஸ்லமின் கொலை குண்டா் கும்பல் போட்டியுடன் தொடா்புடையது. இது ஜூன் 2024இல் சல்மான் மற்றும் சாரிக் தலைமையிலான இரண்டு கும்பல்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் அா்ஷத் என்ற நபரைக் கொன்றதில் தொடங்கியது.
அந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அஸ்லம் சமீபத்தில் சிறையில் இருந்து வெளியே வந்தாா். அா்ஷத்தின் சகோதரா் ஆசாத் பழிவாங்கும் விதமாக அஸ்லாமைக் கொல்ல தனது கூட்டாளிகளுடன் சதி செய்ததாகக் கூறப்படுகிறது.
ஆசாத் மீது உத்தரபிரதேசத்தில் பல குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று போலீஸாா் தெரிவித்தனா்.
தொடர்புடையது
கொலை வழக்கில் கைதான 4 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

குண்டா் சட்டத்தில் இளைஞா் சிறையில் அடைப்பு
பள்ளிபாளையம், பரமத்தி வேலூரில் கஞ்சா பறிமுதல்: 4 போ் கைது

குறும்பட இயக்குநா் கொலை வழக்கு: 3 பெண்கள் உள்பட 9 போ் கைது
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


