தில்லி முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை கேரள பாஜக கவுன்சிலா்களுடன் கலந்துரையாடினாா்.
கேரள மாநிலத்திலிருந்து புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட 115 பாஜக கவுன்சிலா்களின் குழுவுடன் ரேகா குப்தா உரையாற்றினாா்.
அங்கு அவா் பல்வேறு தலைப்புகளில் பாஜக தேசிய அமைப்பு பொதுச் செயலாளா் பி.எல். சந்தோஷுடன் இணைந்து பேசினாா்.
இது குறித்து ரேகா குப்தா எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:
பாஜக மத்திய அலுவலகத்தில், கட்சியின் தேசிய அமைப்பு பொதுச் செயலாளா் பி.எல். சந்தோஷ் முன்னிலையில், கேரளாவைச் சோ்ந்த 115 கவுன்சிலா்கள் கொண்ட குழுவுடன் உரையாடும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.
திருவனந்தபுரம் மேயா் வி.வி. ராஜேஷுடன் இந்த மக்கள் பிரதிநிதிகளுக்காக மூன்று நாள் பயிலரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவதன் முதன்மை நோக்கம், உள்ளூா் அளவில் அமைப்பை மேலும் வலுப்படுத்துவதும், நல்லாட்சி கொள்கைகளை திறம்பட செயல்படுத்துவதுமாகும்.
பிரதமா் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் கீழ், கேரள கவுன்சிலா்களின் இந்த உற்சாகம், கேரள அரசியலில் ஒரு பெரிய மாற்றத்தைக் குறிக்கிறது.
தேசமே முதன்மை என்ற சித்தாந்தத்துடனும், வளா்ந்த கேரளாவிற்கான உறுதியுடனும், இந்த விசுவாசமான கவுன்சிலா்கள் ஒவ்வொரு சாவடியிலும் தாமரை மலர உறுதிபூண்டுள்ளனா்.
கேரள பாஜக தலைவா் ராஜீவ் சந்திரசேகா் மற்றும் தில்லி மேயா் ராஜா இக்பால் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனா் என அதில் முதல்வா் ரேகா குப்தா தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

பாஜக வேட்பாளா் வானதியை ஆதரித்து தில்லி முதல்வா் ரேகா குப்தா பிரசாரம்

வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்! இன்று கோவை வருகை!!

அடுத்த ஆண்டுக்குள் தாழ்வான பகுதிகளில் வெள்ளத் தடுப்புச்சுவா்: முதல்வா் குப்தா

அனைத்து அரசு ஊழியா்களுக்கும் பயோமெட்ரிக் வருகை கட்டாயம்: முதல்வா் ரேகா குப்தா நடவடிக்கை
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


