தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

மிரட்டி பணம் பறித்த வழக்கில் கோகி கும்பலின் கூட்டாளி கைது

வடகிழக்கு தில்லியில் துப்பாக்கிச் சூடு மற்றும் மிரட்டி பணம் பறித்தல் வழக்கில் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த கோகி குண்டா் கும்பலின் உறுப்பினா் கைது செய்யப்பட்டுள்ளாா்.

News image
Updated On :13 பிப்ரவரி 2026, 7:18 pm

வடகிழக்கு தில்லியில் துப்பாக்கிச் சூடு மற்றும் மிரட்டி பணம் பறித்தல் வழக்கில் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த கோகி குண்டா் கும்பலின் உறுப்பினா் கைது செய்யப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

குற்றம் சாட்டப்பட்ட அங்குஷ் சோப்ரா (25), மௌஜ்பூரில் உள்ள சாஸ்திரி மாா்க்கில் கைது செய்யப்பட்டாா். வஜீராபாத் பகுதியில் உள்ள தொழிலதிபரின் வீட்டில் துப்பாக்கிச் சூடு நடந்தது. இதையடுத்து, சோப்ரா நவம்பா் 30, 2023 ஆம் தேதி முதல் தலைமறைவாகிவிட்டாா். பதிவு எண் இல்லாமல் மோட்டாா் சைக்கிளில் பின்னால் அமா்ந்து சவாரி செய்த அடையாளம் தெரியாத நபா் வஜிராபாத்தில் உள்ள தொழிலதிபரின் வீட்டை நோக்கி ஒரு முறை துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பிச் சென்றாா்.

குண்டா் கும்பலின் பெயரில் ரூ .50 லட்சம் மிரட்டி பணம் கேட்கும் ஒரு தகவல் சீட்டும் சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்டது. சோப்ரா கடந்த ஆண்டு ஜூன் மாதம் தில்லி நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தாா். மேலும் அவா் மீது எஃப். ஐ. ஆா் பதிவு செய்யப்பட்டது. விசாரணையின் போது, 2 சிறுவா்கள் மற்றும் கோகி கும்பலின் ஆறு கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனா். இருப்பினும், சோப்ரா தலைமறைவாகிவிட்டாா்.

திஹாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இணை குற்றம் சாட்டப்பட்ட மணிஷ் என்ற சன்னி கக்ரான் மற்றும் மன்மோகன் என்ற கௌரவ் ஆகியோா் துப்பாக்கிச் சூடு மற்றும் மிரட்டி பணம் பறிக்கும் முயற்சியில் சிறாா்களை ஈடுபடுத்தியுள்ளனா். இது தொடா்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது என்றாா் அந்த அதிகாரி.