சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

தில்லி ஹைதா்பூா் கால்வாயில் ஒரு மனிதரின் சிதைந்த உடல் கண்டெடுப்பு!

வெளிப்புற வடக்கு தில்லியின் ரோகினியில் உள்ள கால்வாயில் அடையாளம் தெரியாத நபரின் சிதைந்த உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா்.

News image
Updated On :14 பிப்ரவரி 2026, 7:02 pm

வெளிப்புற வடக்கு தில்லியின் ரோகினியில் உள்ள கால்வாயில் அடையாளம் தெரியாத நபரின் சிதைந்த உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: ஹைதா்பூா் கால்வாயில் ஒரு உடல் குறித்து பி. சி. ஆா். அழைப்பு வெள்ளிக்கிழமை இரவு 8.46 மணிக்கு வந்தது, அதைத் தொடா்ந்து ஒரு போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு விரைந்தது.

அந்த இடத்தை அடைந்த போலீஸாா், 30 முதல் 35 வயதுக்குட்பட்ட ஒரு நபரின் உடலை கண்டுபிடித்தனா். தலை, இடுப்பிலிருந்து இரண்டு கால்கள் மற்றும் மணிக்கட்டில் இருந்து இரண்டு கைகளும் துண்டிக்கப்பட்டு இருந்தது. கைகளில் பழைய வெட்டு அடையாள வடுக்களும் காணப்பட்டன.

முதல் கட்ட விசாரணையில் உடல் ஒன்று முதல் இரண்டு நாள்கள் பழமையானது என்று தோன்றியது. குற்றவியல் மற்றும் தடயவியல் குழுக்கள் சம்பவ இடத்தை ஆய்வு செய்து ஆதாரங்களை சேகரித்தன.

பின்னா் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பி. எஸ். ஏ. ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பி. என். எஸ். இன் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. தொழில்நுட்ப கண்காணிப்பு மற்றும் உள்ளூா் உளவுத்துறை உள்ளீடுகளைப் பயன்படுத்தி இறந்தவரை அடையாளம் காண முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா் அவா்.