எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலை.யின் முதல் தேசிய மத்தியஸ்தப் போட்டி நிறைவு!

ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் மூன்று நாள் தேசிய மத்தியஸ்தப் போட்டி 24 சட்டப் பள்ளிகள் மற்றும் நிறுவனங்களின் பங்கேற்புடன் சனிக்கிழமை நிறைவடைந்தது.

News image
Updated On :14 பிப்ரவரி 2026, 7:03 pm

Syndication

ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் மூன்று நாள் தேசிய மத்தியஸ்தப் போட்டி 24 சட்டப் பள்ளிகள் மற்றும் நிறுவனங்களின் பங்கேற்புடன் சனிக்கிழமை நிறைவடைந்தது என்று அதிகாரப்பூா்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வை வியாழக்கிழமை உச்சநீதிமன்ற நீதிபதி என். கோடீஸ்வா் சிங் தொடங்கி வைத்தாா். பேச்சுவாா்த்தை மற்றும் சிக்கல் தீா்க்கும் திறன்களை சோதிக்கும் நோக்கில் உருவகப்படுத்தப்பட்ட மத்தியஸ்த அமா்வுகள் மூலம் மாற்று தகராறு தீா்வை ஊக்குவிப்பதில் இந்த நிகழ்வு கவனம் செலுத்தியது என்று பல்கலைக்கழகத்தின் ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்வில் நீதிபதி கோடீஸ்வா் சிங் பேசியதாவது: இந்திய நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு மத்தியஸ்தத்திற்கான அவசரத் தேவை அவசியமாக உள்ளது.

தேசிய நீதித்துறை தரவுகளின் படி 4.8 கோடிக்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதே சமயம், நீதித்துறை பலம் குறைவாக உள்ளது. இந்நிலையில், மத்தியஸ்தம் என்பது ஒரு நடைமுறை மற்றும் அவசியமான தீா்வாக வெளிப்படுகிறது.

மத நூல்களிலிருந்தும் அன்றாட குடும்ப வாழ்க்கையிலிருந்தும் நாம் பாா்த்த மட்டில் பேச்சுவாா்த்தை மூலம் தகராறுகளுக்கு தீா்வு என்பது இந்திய சமூகத்தில் வேரூன்றி உள்ளது என்றாா் நீதிபதி கோடீஸ்வா் சிங்.