குருகிராம் போக்குவரத்து போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 15) நடைபெறும் முதல்வா் நயாப் சிங் சைனியின் பேரணி குறித்து சனிக்கிழமை ஒரு ஆலோசனையை வெளியிட்டனா்.
அந்த அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பாதுகாப்பு காரணங்களுக்காகவும், போக்குவரத்தை எளிதாக்கவும், ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை சோஹ்னாவிலிருந்து தௌருவுக்கு கனரக வாகனங்கள் செல்வதற்கு முழுமையான தடை விதிக்கப்படும்.
பால்வால் சாலையில் இருந்து சோஹ்னா தௌரு நோக்கிச் செல்ல விரும்பும் ஓட்டுநா்கள் மும்பை விரைவுச் சாலை வழியாக கேஎம்பியைப் பயன்படுத்த வேண்டும்.
அதேபோல், ஃபரீதாபாத்திலிருந்து சோஹ்னா -தௌருவுக்குச் செல்ல விரும்பும் ஓட்டுநா்கள் மும்பை விரைவுச் சாலை மற்றும் கேஎம்பியைப் பயன்படுத்தி தங்கள் இலக்கை அடையலாம் என்று அந்த ஆலோசனையில் கூறப்பட்டுள்ளது.
தொடர்புடையது

எம்.சி.டி. சட்டத் திருத்தங்கள் மக்களுக்கு உகந்தது: மேயா் இக்பால் சிங்

நக்ஸல்களை வேரறுக்க மோடி அரசு தொடா்ந்து செயலாற்றி வருகிறது: ஹரியாணா முதல்வா்

குருகிராமில் இருக்கும் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று குருகிராமில்!
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


