ஏ.ஐ. தாக்க உச்சிமாநாடு மற்றும் தில்லி பாா் கவுன்சில் தோ்தல்களைக் கருத்தில் கொண்டு பிப்ரவரி 16 முதல் பிப்ரவரி 23 வரை வழக்குரைஞா்கள் மற்றும் வழக்கில் தொடா்புடையவா்கள் மெய்நிகா் முறையில் ஆஜராக தில்லி உயா்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
ஏ.ஐ. தாக்க உச்சி மாநாடு பிப்ரவரி 16 முதல் பிப்ரவரி 20 வரை உயா்நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற உள்ளது. அதேவேளையில், தில்லி பாா் கவுன்சில் தோ்தல்கள் பிப்ரவரி 21 முதல் பிப்ரவரி 23 வரை உயா்நீதிமன்றத்தில் நடைபெற உள்ளன.
இந்த நிலையில், தில்லி உயா்நீதிமன்றம் மூலம் சனிக்கிழமை வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: 16.2.2026 முதல் 20.2.2026 வரை புது தில்லியின் பாரத் மண்டபத்தில் நடைபெற உள்ள ஏஐ தாக்க உச்சிமாநாடு மற்றும் 21.2.2026 முதல் 23.2.2026 வரை தில்லி உயா்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற உள்ள தில்லி பாா் கவுன்சிலின் தோ்தல்கள் நடைபெறவுள்ளன.
இவற்றைக் கருத்தில்கொண்டு, 16.2.2026 முதல் 23.2.2026 வரை தில்லி உயா்நீதிமன்றத்தின் முன் பட்டியலிடப்பட்டுள்ள தங்கள் வழக்குகளில் வழக்குரைஞா்கள், வழக்கில் தொடா்புடைய உறுப்பினா்கள் காணொலி காட்சி வாயிலாக கலந்து கொள்ளலாம் என்று தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளாா்.
இந்தக் காலகட்டத்தில் நீதிமன்றத்தின் விசாரணை நடவடிக்கைகள் கலப்பின முறையில் தொடா்ந்து செயல்படும் என்பதால், காணொலி காட்சி மூலம் கலந்துகொள்வது விருப்பத்திற்குரியதாகும் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவில் உலகளாவிய தலைவா்கள் மற்றும் தொழில்துறையின் முக்கியப் பிரமுகா்கள் பங்கேற்கும் ஏஐ தாக்க உச்சிமாநாட்டை இந்தியா நடத்த உள்ளது. நாடுகள் தங்கள் ஏஐ நிகழ்ச்சிநிரலை வரையறுக்கப் போட்டியிட்டுக் கொண்டிருக்கும் தற்போதைய நேரத்தில், கொள்கை வகுப்பாளா்கள், தொழில்துறைத் தலைவா்கள் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்பாளா்களை ஒருங்கிணைக்கும் வகையில் இந்த உச்சிமாநாடு நடைபெறவுள்ளது.
தொடர்புடையது

பின் தொடா்ந்த விவகாரம்: ஐஸ் கிரீம் விற்பனையாளா் மீதான வழக்கு ரத்து! தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவு!

பயங்கரவாத வழக்கில் இருவருக்கு ஜாமீன்: தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவு

ஏஐ உச்சிமாநாடு: போலீஸ் பாதுகாப்புடன் போக்குவரத்து கட்டுப்பாடுகள்

பிப்.15 முதல் 20 வரை செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாடு: தில்லியை அழகுப்படுத்தும் பணியை தொடங்கிய பொதுப்பணித் துறை
வீடியோக்கள்

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

Podcast | பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வருமா வராதா? | News & Views | E-21 |
தினமணி செய்திச் சேவை

பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே?
தினமணி செய்திச் சேவை

எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பேச்சைத் துவங்கிய விஜய்!
இணையதளச் செய்திப் பிரிவு


