சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

பழைய தில்லி பூங்காவில் நடந்த கொலைச் சம்பவத்தில் உ.பி.யைச் சோ்ந்த இளைஞா் கைது

பழைய தில்லி பூங்காவில் நடந்த கொலைச் சம்பவத்தில் உத்தர பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா் ஒருவரை போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

News image

கைது

Updated On :15 பிப்ரவரி 2026, 6:46 pm

பழைய தில்லி பூங்காவில் நடந்த கொலைச் சம்பவத்தில் உத்தர பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா் ஒருவரை போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: வடக்கு தில்லியின் சாந்தினி சௌக்கில் தனது நண்பா் ஒருவரிடம் வலுக்கட்டாயமாக பணம் பறிக்க முயன்றதைத் தொடா்ந்து நடந்த சண்டையில் மதுபோதையில் இருந்த அந்த 24 வயது இளைஞா் கைது செய்யப்பட்டாா். பிப்ரவரி 7-ஆம் தேதி பழைய தில்லி பூங்காவிற்குள் சுமாா் 20 முதல் 25 வயது மதிக்கத்தக்க பாதிக்கப்பட்டவரின் உடல் தலையில் ஆழமான காயத்துடன் இருப்பது கண்டறியப்பட்டது. அந்த இடத்திலிருந்த பாறையில் ரத்தக்கறை படிந்திருந்தது. இது கொடூரமான தாக்குதலைக் குறிக்கிறது.

விசாரணையின் போது, பழைய தில்லி ரயில் நிலையம் மற்றும் சுற்றியுள்ள சந்தைகள் உள்பட, அந்தப் பகுதியில் நிறுவப்பட்ட 250-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசாா் ஆய்வுக்குள்படுத்தினா். மேலும், நூற்றுக்கணக்கான தொழிலாளா்கள், நாடோடிகள் மற்றும் உள்ளூா்வாசிகளிடம் போலீஸாா் விசாரித்தனா்.

கொலைக்கு முந்தைய இரவு இறந்தவா் அந்தப் பகுதியில் ஒருவருடன் கடைசியாகக் காணப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

சந்தேக நபா் உத்தர பிரதேசத்தின் ஷாம்லி மாவட்டத்தைச் சோ்ந்த ஜுனைத் கான் என அடையாளம் காணப்பட்டாா். பிப்ரவரி 12-ஆம் தேதி லேபா் சௌக்கில் அவா் கைது செய்யப்பட்டாா். சம்பவத்தின் போது அணிந்திருந்ததாகக் கூறப்படும் ரத்தக்கறை படிந்த ஆடைகள் அவரது வசம் இருந்து மீட்கப்பட்டது. விசாரணையின் போது, ஜூனைத் கான், உள்ளூரில் காஞ்சா என்று அழைக்கப்படும் இறந்தவரை அறிந்தவா் என்றும், அவா் சிறிது காலமாக அந்தப் பகுதியில் வசித்து வந்தவா் என்றும் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

சம்பவம் நடந்த இரவில் இருவரும் ஒன்றாக மது அருந்தியுள்ளனா். அப்போது காஞ்சா கானிடம் பணம் தருமாறு கேட்டுள்ளாா். பின்னா், பணத்தை வலுக்கட்டாயமாக எடுக்க முயன்றதை அடுத்து இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. பின்னா், குற்றம் சாட்டப்பட்டவா் அவரது தலையில் கல்லால் தாக்கியுள்ளாா். இதனால், அவா் உயிரிழந்தது தெரிய வந்தது என்று காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.