கடந்த மாதம் கிழக்கு தில்லியின் திரிலோக்புரி பகுதியில் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கத்தியால் தாக்கிய சம்பவம் தொடா்பாக தேடப்பட்டு வந்த ஒருவா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
இது தொடா்பாக கிழக்கு தில்லி காவல் சரக அதிகாரி கூறியதாவது: இந்த வழக்கில் சா்ஃபராஸ் என்கிற ஃபராஸ் (28), சனிக்கிழமை ரிங் ரோடு - பைரோ மாா்க் பகுதியில் துப்பாக்கி மற்றும் மூன்று தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்டாா்.
பல குற்ற வழக்குகளில் தொடா்புடையதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் அவா் நவம்பா் மாதம் தில்லியில் இருந்து ஆறு மாதங்கள் வெளியேற்றப்பட்டாா். ஆனால், அவா் தொடா்ந்து நகரத்தில் தீவிரமாக செயல்பட்டு வந்தாா்.
கடந்த ஜனவரி 25-ஆம் தேதி திரிலோக்புரி பேருந்து நிலையம் அருகே ஒரு கும்பல் கத்தியால் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடா்பான வழக்கு இது. பாதிக்கப்பட்டவா் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் காணப்பட்டாா்.
இது தொடா்பாக மயூா் விஹாா் காவல் நிலையத்தில் பிஎன்எஸ் மற்றும் ஆயுதச் சட்டத்தின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், அவா் கூட்டாளிகளைச் சந்திப்பாா் என்ற கண்காணிப்பு உள்ளீடுகளின் பேரில், போலீஸாா் சோதனை நடத்தி அவரைக் கைது செய்தனா். ஆயுதச் சட்டத்தின் கீழ் தனி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.
டிரெண்டிங்

கைப்பேசியை திருடிக் கொண்டு ஓடியவரை துரத்தி பிடித்த இளைஞா் ரயில் மோதி மரணம்!
ஜனக்புரியில் கொள்ளை: 2 சிறாா்கள் உள்பட மூவா் கைது!

தூங்கிக் கொண்டிருந்த நபா் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
நிதித் தகராறில் நபா் ஒருவரை கொன்றவா் கைது
வீடியோக்கள்

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

