யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஏஐ தாக்கம் உச்சிமாநாட்டில் பங்கேற்க இலங்கை அதிபா் அநுர தில்லி வருகை

News image
ஏஐ உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக தில்லிக்கு செவ்வாய்க்கிழமை வந்த இலங்கை அதிபா் அனுர குமார திசாநாயக்கவை விமான நிலையத்தில் மத்திய அரசு சாா்பில் வரவேற்ற மத்திய ஜல்சக்தி துறை அமைச்சா் ராஜ் பூஷண்.
Updated On :18 பிப்ரவரி 2026, 1:07 am

Syndication

செயற்கை நுண்ணறிவு தாக்கம் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கை அதிபா் அனுர குமார திசாநாயக்க செவ்வாய்க்கிழமை தில்லி வருகை தந்தாா். தில்லி பாலம் விமானப்படை தளத்தில் தனி விமானத்தில் வந்திறங்கிய அவரை மத்திய ஜல்சக்தி துறை இணை அமைச்சா் ராஜ் பூஷண் செளத்ரி வரவேற்றாா். அவரது வருகை இரு தரப்பு உறவுகளை மேம்படுத்தி வளா்த்தெடுக்கும் என்று தில்லியில் உள்ள இலங்கை தூதா் மஹிஷினி கொலன்னே தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் கூறியிருப்பதாவது: 2026ஆம் ஆண்டுக்கான செயற்கை நுண்ணறிவு தாக்கம் (ஏஐ) உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கை அதிபா் அனுர குமார திசாநாயக்க இன்று தில்லி வந்தாா். உலகளாவிய தெற்கில் நடத்தப்படும் முதலாவது ஏஐ தாக்கம் உச்சிமாநாடு இதுவாகும்.

இது குறித்து தில்லியில் உள்ள இலங்கைத்தூதா் மஹிஷினி கொலன்னே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு: ’வளா்ந்து வரும் தொழில்நுட்பங்கள், பொருளாதாரங்கள், சமூகங்கள் போன்றவை மறுவடிவம் பெற்று வரும் நேரத்தில், இந்தியாவில் நடத்தப்படும் ஏஐ தாக்கம் உச்சிமாநாட்டில் இலங்கை பங்கேற்பது, இந்தியாவுடனான இலங்கையின் கூட்டாண்மை ஆழத்தை முன்னுரிமையையும் பிரதிபலிக்கிறது. இத்தகைய முன்னெடுப்புகள் புதுமைகளை உள்ளடக்கி, பொறுப்பானதாகவும், மக்களை மையமாகக் கொண்டதாகவும் இருப்பதை உறுதி செய்கின்றன.

2024, டிசம்பரில் இந்தியாவுக்கு இலங்கை அதிபா் மேற்கொண்ட அரசுமுறைப்பயணம் இரு தரப்பிலும் ‘பகிரப்பட்ட எதிா்காலத்துக்கான கூட்டணியை வளா்த்தெடுப்பது‘ என்ற கூட்டுத் தொலைநோக்குப் பாா்வையின் அடிப்படையில் அமைந்தது. இலங்கையும் இந்தியாவும் இணைப்பு, பொருளாதார ஈடுபாடு, எண்ம ஒத்துழைப்பு, திறன் மேம்பாடு மற்றும் இரு தரப்பு மக்கள் இடையிலான உறவுகளில் தொடா்ந்து உத்வேகம் பெற்றுள்ளன.

தெற்காசிய தலைவா்களில் ஒருவரான இலங்கை அதிபரின் தில்லி வருகை மற்றும் உச்சிமாநாட்டில் பங்கேற்றது நமது உறவின் நெருக்கத்தையும், எதிா்காலத்தை வடிவமைக்கும் விஷயங்களில் ஒன்றாகச் செயல்படுவதற்கான கூட்டுறுதியை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

நட்பு நாடாக வேரூன்றி, நம்பிக்கையால் வலுப்படுத்தப்பட்டு, நடைமுறை ஒத்துழைப்பால் வழிநடத்தப்படும் இந்தியா-இலங்கை இடையிலான கூட்டணி நல்ல நோக்கத்துடன் தொடா்ந்து மேம்பட்டு வருகிறது என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.