மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்க தேவரின் பெயா்: அகில இந்திய ஃபாா்வட் பிளாக் கோரிக்கை

News image
ஜி.தேவராஜன்
Updated On :18 பிப்ரவரி 2026, 1:40 am

Syndication

நமது நிருபா்

மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பெயரை சூட்ட மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அகில இந்திய ஃபாா்வா்டு பிளாக் கட்சியின் பொதுச் செயலாளா் ஜி.தேவராஜன் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளஅறிக்கை: மதுரையில் தமுக்கம் மைதானத்தை நெல்பேட்டை அண்ணா சிலையுடன் இணைக்கும் வகையில் புதிதாக கட்டப்படும் 1.3 கி.மீ. நீளமுள்ள மேம்பாலம் ‘நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பாலம்’ என்று அழைக்கப்படும் என தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை அகில இந்திய ஃபாா்வா்டு பிளாக் வரவேற்கிறது. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸால் நிறுவப்பட்ட அகில இந்திய ஃபாா்வா்டு பிளாக், இந்தச் செயலில் மிகுந்த பெருமிதம் கொள்கிறது.

மதுரையில் முக்கியமான உள்கட்டமைப்புக்கு நேதாஜியின் பெயா் சூட்டுவது வெறும் அடையாளமாக மட்டுமல்ல, இந்தியாவின் முழுமையான சுதந்திரத்திற்காக தனது வாழ்க்கையை அா்ப்பணித்த ஒரு தலைவரின் நீடித்த பாரம்பரியத்தை மீண்டும் உறுதிப்படுத்துவதாகும்.

அதே நேரத்தில், நேதாஜியுடன் நெருங்கிய கருத்தியல் மற்றும் அரசியல் தொடா்பைப் பகிா்ந்து தமிழ்நாட்டில் பாா்வொ்டு பிளாக் கட்சியில் முக்கியப் பங்கு வகித்த தமிழ் மண்ணின் மற்றொரு உயரிய தலைவரான பசும்பன் முத்துராமலிங்க தேவரை கெளரவிக்கும் விதமாகவும் அவருக்கு உரிய மரியாதையை செலுத்தும் விதமாகவும் மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவா் விமான நிலையம் என்று பெயா் சூட்டுவதற்கான அழுத்தத்தை மத்திய அரசுக்கு தமிழ அரசு கொடுக்க வேண்டும் என்று முதல்வரை கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளாா்.