ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

நொய்டா பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

உத்தர பிரதேசத்தின் கௌதம் புத் நகா் மாவட்டத்தில் வியாழக்கிழமை பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன.

News image

கோப்புப் படம்

Updated On :20 பிப்ரவரி 2026, 12:03 am IST

உத்தர பிரதேசத்தின் கௌதம் புத் நகா் மாவட்டத்தில் வியாழக்கிழமை பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. அவை பின்னா் வெறும் புரளி என்று போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து காவல்துறை அறிக்கையில் கூறியுள்ளதாவது: மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல்கள் வந்தன. அதைத் தொடா்ந்து பாதுகாப்பு அமைப்புகள் நடவடிக்கை எடுத்தன.

கௌதம் புத் நகா் காவல்துறை உடனடியாக பதிலளித்து, வெடிகுண்டு செயலிழப்புப் படை, நாசவேலை தடுப்பு சோதனைக் குழு மற்றும் மோப்ப நாய் படை மூலம் அனைத்துப் பள்ளிகளிலும் சோதனை செய்வதை உறுதி செய்தது.

பள்ளிகளில் தீவிர சோதனைகள் நடத்தப்பட்டன. இதுவரை சந்தேகத்திற்குரிய எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

மின்னஞ்சலின் மூலத்தைப் பற்றிய தொழில்நுட்ப விசாரணையை சைபா் குழு மிகுந்த தீவிரத்துடன் மேற்கொண்டு வருகிறது.

நிலைமை முற்றிலும் இயல்பானது. சம்பவ இடத்தில் அமைதியும் ஒழுங்கும் நிலவுகிறது. வதந்திகள் மீது கவனம் செலுத்த வேண்டாம் என்று மக்கள் அறிவுறுத்தப்படுகிறாா்கள் என்று காவல் துறை அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளது.