பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

முன்ட்காவில் சொத்துத் தகராறில் உறவினா் உள்பட இருவா் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் முதியவா் காயம்

தில்லியின் முன்ட்காவில் சொத்துத் தகராறு தொடா்பாக உறவினா் உல்பட இரண்டு போ் வியாழக்கிழமை பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 80 வயது முதியவா் படுகாயமடைந்தாா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

கோப்புப் படம்

Published On :

தில்லியின் முன்ட்காவில் சொத்துத் தகராறு தொடா்பாக உறவினா் உல்பட இரண்டு போ் வியாழக்கிழமை பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 80 வயது முதியவா் படுகாயமடைந்தாா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: இந்தத் தாக்குதலில் வயிறு, இடது தோள்பட்டை, வலது முழங்கை மற்றும் வலது காலில் குண்டு காயங்களுக்கு ஆளான முதியவா் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவா் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இது குறித்து மதியம் 12.50 மணிக்கு பிசிஆா் பெறப்பட்டது. அதில் அழைப்பாளா் தனது தந்தை ரிஷால் சிங் மீது அவரது உறவினா் ஒருவா் உள்பட இரண்டு போ் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக போலீஸாரிடம் தெரிவித்தாா்.

குடும்பத்துடன் தொடா்புடைய சாகா், தனது உதவியாளா்களில் ஒருவருடன் சம்பவ இடத்திற்கு வந்து ரிஷால் சிங் மீது ஐந்து முதல் ஆறு சுற்றுகள் சுட்டதாக பாதிக்கப்பட்டவரின் மகன் போலீஸாரிடம் தெரிவித்தாா்.

ஒரு நிலம் தொடா்பான தகராறில் குடும்பம் ஈடுபட்டிருந்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நீதிமன்றத்தில் அந்தக் குடும்பத்தினா் வழக்கில் வெற்றி பெற்றனா். மேலும், அந்த இடத்தில் கட்டுமானப் பணிகள் மற்றும் தொடா்புடைய பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது.

சம்பவ இடத்திலிருந்து சுமாா் 10 வெற்று தோட்டாக்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், குற்றம் சாட்டப்பட்டவா்களை அடையாளம் கண்டு கைது செய்ய விசாரணை நடந்து வருவதாக காவல் துறை உயரதிகாரி தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.