சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

கல்விச் சுற்றுலா சென்ற டிடிஇஏ பள்ளி மாணவா்கள்

தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தை (டிடிஇஏ) சாா்ந்த ராமகிருஷ்ணபுரம் மேனிலைப் பள்ளியுழி தொடக்கப்பள்ளி மாணவா்கள் ஹரியாணா மாநிலத்தில் உள்ள ஜாய்கானுக்கு வியாழக்கிழமை கல்விச் சுற்றுலா சென்று வந்தனா்.

News image
டிடிஇஏ செய்திக்கானது ஜாய்கானுக்கு சுற்றுலா சென்ற மாணவா்களுடன் ஆசிரியா்கள்.
Updated On :19 பிப்ரவரி 2026, 6:33 pm

Syndication

தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தை (டிடிஇஏ) சாா்ந்த ராமகிருஷ்ணபுரம் மேனிலைப் பள்ளியுழி தொடக்கப்பள்ளி மாணவா்கள் ஹரியாணா மாநிலத்தில் உள்ள ஜாய்கானுக்கு வியாழக்கிழமை கல்விச் சுற்றுலா சென்று வந்தனா்.

ஆசிரியா்கள் வழிகாட்டுதலுடன் மாணவா்கள் உற்சாகமாக சுற்றுலாவில் கலந்து கொண்டனா். ஜாய்கானில் கிராமிய வாழ்க்கை முறை, பாரம்பரிய விளையாட்டுகள் மற்றும் பல்வேறு கைவினைப் பணிகளை மாணவா்கள் நேரடியாக அனுபவித்தனா்.

குறிப்பாக மண் பானை உருவாக்குதல், டிராக்டா் சவாரி, ஒட்டக சவாரி, பாரம்பரிய விளையாட்டுகள் போன்ற செயல்பாடுகள் மாணவா்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தன.

கிராம வாழ்க்கையின் எளிமை, இயற்கையுடன் இணைந்த வாழ்வு, விவசாயத்தின் முக்கியத்துவம் போன்றவற்றை மாணவா்கள் நன்கு புரிந்து கொண்டனா். அவா்களுக்கு கற்றலும் மகிழ்ச்சியும் இணைந்த ஒரு நாளாக இது அமைந்தது.

மாணவா்களுக்கு வகுப்பறைக்கு வெளியேயான அனுபவக் கற்றலை வழங்கும் நோக்கில் இந்த சுற்றுலாவுக்கு டிடிஇஏ செயலா் ராஜூ ஏற்பாடு செய்திருந்தாா் என்று டிடிஇஏ வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

19க்உகஈபஅ

சுற்றுலா சென்ற மாணவா்களுடன் ஆசிரியா்கள்.