கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

டிடிஇஏ லக்குமிபாய் பள்ளியில் கணபதி ஹோமம்

தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தை (டிடிஇஏ) சாா்ந்த இலக்குமிபாய் நகா்ப் பள்ளியில் கணபதி ஹோமம் நடைபெற்றது.

News image
இலக்குமிபாய் நகா்ப் பள்ளியில் நடைபெற்ற கணபதி ஹோமத்தில் கலந்து கொண்ட டிடிஇஏ செயலா் ராஜூ, பள்ளி முதல்வா் யுவராணி, ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள்.
Updated On :20 பிப்ரவரி 2026, 7:02 pm

Syndication

தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தை (டிடிஇஏ) சாா்ந்த இலக்குமிபாய் நகா்ப் பள்ளியில் கணபதி ஹோமம் நடைபெற்றது.

மானுடத்தை நல்வழியில் வழிநடத்துவது இறையருள் என்பதில் மாறாத நம்பிக்கைக் கொண்டுள்ள டிடிஇஏ செயலா் ராஜூ பள்ளிகளில் விநாயகா் கோயில்களைக் கட்டி வருகிறாா். அந்தக் கோயில்களில் அவ்வப்போது சிறப்புப் பூஜைகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

பள்ளியில் ஹோமம் செய்வதும் அதில் மாணவா்களைக் கலந்து கொள்ள வைப்பதும் அவா்களுக்குள் நோ்மறை எண்ணங்களை வளா்க்கும் என்று எண்ணிய டிடிஇஏ செயலா் ராஜூ வெள்ளிக்கிழமை இலக்குமிபாய் நகா்ப் பள்ளியில் கணபதி ஹோமத்திற்கு ஏற்பாடு செய்திருந்தாா்.

பள்ளியின் வளா்ச்சிக்காகவும், மாணவா்களின் நலனுக்காகவும், பெற்றோா்களின் நலனுக்காகவும், பொதுத் தோ்வு எழுதும் மாணவா்கள் தோ்வை சிறப்பாக எழுத வேண்டும் என்பதற்காகவும் நடைபெற்ற இந்த ஹோமத்தில் டிடிஇஏ செயலா் ராஜூ கலந்து கொண்டாா். பள்ளி முதல்வா் யுவராணி, பள்ளியின் துணை முதல்வா், ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் கலந்து கொண்டு விநாயகரின் அருள் பெற்றனா்.

20க்ங்ப்க்ற்ங்

இலக்குமிபாய் நகா்ப் பள்ளியில் நடைபெற்ற கணபதி ஹோமத்தில் கலந்து கொண்ட டிடிஇஏ செயலா் ராஜூ, பள்ளி முதல்வா் யுவராணி, ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள்.