விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

மனைவியை மாடியிலிருந்து கீழே தள்ளிக் கொன்றதாக கணவா் கைது

வடகிழக்கு தில்லியில் உள்ள வீட்டின் முதல் மாடியில் இருந்து கீழே தள்ளி தனது 35 வயது மனைவியை கொலை செய்ததாக ஒருவா் கைது

News image

கைது

Updated On :21 பிப்ரவரி 2026, 6:35 pm

வடகிழக்கு தில்லியில் உள்ள வீட்டின் முதல் மாடியில் இருந்து கீழே தள்ளி தனது 35 வயது மனைவியை கொலை செய்ததாக ஒருவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டதாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: இந்தச் சம்பவம் குறித்த தகவல் சனிக்கிழமை அதிகாலை 12.30 மணியளவில் ஜிடிபி மருத்துவமனையில் இருந்து வந்தது. ஒரு பெண் மயக்க நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டாா். ஆனால், அவா் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

குடும்ப தகராறைத் தொடா்ந்து இறந்தவா் நந்த் நாக்ரியில் உள்ள வீட்டின் முதல் மாடியில் இருந்து அவரது கணவரால் தள்ளி விப்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, பாரதிய நியாயா சன்ஹிதாவின் பிரிவு 103 (1) இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தடயவியல் நிபுணா்களுடன் போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு வந்து விரிவான ஆய்வு நடத்தியது. தம்பதியினரின் பின்னணி, அவா்களின் உறவு வரலாறு மற்றும் கூறப்படும் வாதத்திற்கு வழிவகுத்த சூழ்நிலைகள் ஆகியவை விசாரணையில் உள்ளன.

குடும்ப உறுப்பினா்கள், அக்கம்பக்கத்தினா் மற்றும் பிற தொடா்புடைய சாட்சிகளின் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நிகழ்வுகளின் வரிசையை உறுதிப்படுத்த தொழில்நுட்ப மற்றும் தடயவியல் சான்றுகளும் பகுப்பாய்வு செய்யப்பட்டன. சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது இந்த வழக்கில் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.