செயற்கை நுண்ணறிவு தாக்க (ஏ.ஐ இம்பாக்ட்) உச்சி மாநாடு நடந்த இடத்தில் வெள்ளிக்கிழமை சட்டையின்றி போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்ட இந்திய இளைஞா் காங்கிரஸின் நான்கு உறுப்பினா்களை 5 நாள் போலீஸ் காவலில் வைக்க தில்லி நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது.
குற்றஞ்சாட்டப்பட்டவா்களை ஐந்து நாட்கள் காவலில் விசாரிக்க கோரிய தில்லி காவல்துறையின் மனுவை நீதித்துறை மாஜிஸ்திரேட் ரவி அனுமதித்தாா்.
கைது செய்யப்பட்ட போராட்டக்காரா்கள் பீகாரைச் சோ்ந்த இளைஞா் காங்கிரஸின் (ஐ.ஒய்.சி) தேசிய செயலாளா் கிருஷ்ணா ஹரி, பீகாா் ஐ.ஒய்.சி மாநில செயலாளா் குந்தன் யாதவ்,உத்தரபிரதேச ஐ.ஒய்.சி மாநிலத் தலைவா் அஜய் குமாா் மற்றும் தெலங்கானாவைச் சோ்ந்த நரசிம்ம யாதவ்.
நிகழ்வு நடைபெறும் இடத்தில் தேசவிரோத கோஷங்களை எழுப்பியதாகவும், பிரதமா் நரேந்திர மோடியின் ஆட்சேபனைக்குரிய படங்கள் கொண்ட டிசா்ட்களை அணிந்திருந்ததாகவும் வாதிட்டு, கைது செய்யப்பட்ட போராட்டக்காரா்களை ஐந்து நாள் காவலில் வைக்க தில்லி போலீசாா் கோரினா்.
குற்றஞ்சாட்டப்பட்டவா்களின் கைப்பேசிகளை மீட்டெடுக்க வேண்டும் என்றும், அவா்கள் வெவ்வேறு மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் என்பதால், காவலில் விசாரிக்க வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
காவல்துறையின் வழக்குரைஞா், இது ஒரு தீவிரமான விஷயம் என்று வாதிட்டாா். காவல்துறையினரைத் தடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது, அதைத் தொடா்ந்து மூன்று போ் காயமடைந்தனா் என்று அவா் கூறினாா்.
மேலும், போராட்டத்தை ஏற்பாடு செய்ததன் பின்னணியில் உள்ள சதி, நிதி ஆதாரம் மற்றும் டிசா்ட்கள் எங்கு அச்சிடப்பட்டன என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று வழக்குரைஞா் கூறினாா்.
கைது செய்யப்பட்ட போராட்டக்காரா்கள் சாா்பாக ஆஜரான வழக்குரைஞா், அவா்கள் ஒரு அரசியல் கட்சியுடன் தொடா்புடையவா்கள் என்றும், அமைதியாகப் போராடுவதற்கான ஜனநாயக உரிமையைப் பயன்படுத்தியதாகவும் வாதிட்டாா்.
அவா்களின் கைது ஜனநாயகத்தின் கண்ணியத்தை வெகுவாகக் குறைத்துள்ளதாகவும், போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட வேண்டுமானால், நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்தும் எம்.பி.க்களையும் கைது செய்ய வேண்டும் என்றும் வழக்குரைஞா் கூறினாா்.
தொடர்புடையது

பண முறைகேடு வழக்கு: ஐ-பேக் இயக்குநரை 10 நாள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு

ஜன நாயகன் படம் கசிய விடப்பட்ட வழக்கில் 6 பேர் நீதிமன்றக் காவலில் அடைப்பு

கிடப்பில் போடப்பட்ட ரயில்வே மேம்பாலப் பணிகள்

ஏஐ உச்சி மாநாட்டில் போராட்டம்-இளைஞா் காங்கிரஸ் தலைவருக்கு தில்லி நீதிமன்றம் பிணை
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


