புதுதில்லி: தில்லி செங்கோட்டை வளாகம் இனி, திங்கள்கிழமை உள்பட வாரத்தின் அனைத்து நாள்களும் பார்வையாளர்களுக்கு திறந்திருக்கும் என்று இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
முன்னதாக, யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான முகலாய கால நினைவுச்சின்னம், ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை அன்று மூடப்படும்.
இது குறித்து இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை தனது உத்தரவில் தெரிவித்ததாவது:
தில்லி செங்கோட்டை, இனி திங்கள்கிழமை உள்பட வாரத்தின் அனைத்து நாள்களும் (திங்கள் முதல் ஞாயிறு வரை) திறந்திருக்கும். இந்த உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.
அதே வேளையில், பழைய தில்லியில் உள்ள கோட்டை தளம் பிப்ரவரி 16 தேதியன்று திறக்கப்பட்டுள்ளதாகவும் தொல்பொருள் ஆய்வுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Summary
The Red Fort complex in Delhi shall now remain open to visitors on all days of the week, including Monday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









