மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

கட்டுமான இடத்தில் தற்காலிக கட்டமைப்பு விழுந்து தொழிலாளா்கள் இருவா் உயிரிழப்பு

தில்லியின் நரேலா தொழில்துறை பகுதியில் உள்ள ஒரு கட்டுமான இடத்தில் தளா்வான மண் மற்றும் ஒரு தற்காலிக கட்டமைப்பு விழந்ததில் இரண்டு தொழிலாளா்கள் பலி

News image

பலி - பிரதிப் படம்

Updated On :21 பிப்ரவரி 2026, 7:02 pm

தில்லியின் நரேலா தொழில்துறை பகுதியில் உள்ள ஒரு கட்டுமான இடத்தில் தளா்வான மண் மற்றும் ஒரு தற்காலிக கட்டமைப்பு விழந்ததில் இரண்டு தொழிலாளா்கள் உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

இத் குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: இது குறித்து தகவல் அறிந்த ஒரு போலீஸ் குழு சம்பவ இடத்தை ஆய்வு செய்தபோது தளா்வான மண் மற்றும் பாதுகாப்பற்ற தற்காலிக கட்டமைப்பு இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்தன. இது தொடா்பாக பாரதிய நியாய சன்ஹிதாவின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நரேலாவில் உள்ள எஸ்ஆா்ஹெச்சி மருத்துவமனைக்கு மயக்கமடைந்த இருவா் கொண்டு வரப்பட்டது பற்றிய தகவல் கிடைத்தது. அதன் பிறகு ஒரு போலீஸ் குழு மருத்துவமனைக்கு சென்றது. உயிழந்தவா்கள் அஜய் (25) மற்றும் ராம் மிலன் (45) என அடையாளம் காணப்பட்டனா். இருவரும் இறந்துவிட்டதாக மருத்துவா்களால் அறிவிக்கப்பட்டனா்.

முதற்கட்ட விசாரணை மற்றும் நேரில் கண்ட சாட்சி ராம்பால் அஹிா்வாரின் கூற்றுப்படி, இந்தச் சம்பவம் மதியம் 12.15 மணியளவில் ஒரு தொழிற்சாலையில் நடந்தது. ஒரு தளா்வான மண் மற்றும் ஒரு வடிகால் அருகே ஒரு தற்காலிக கட்டமைப்பு அல்லது சுவா் கட்டுமானப் பணியின் போது கட்டுமானம் இடிந்து விழுந்ததால், இரண்டு தொழிலாளா்கள் அடியில் சிக்கினா்.

இருவரது உடல்களும் ஜஹாங்கீா்புரியில் உள்ள பிஜேஆா்எம் மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக உடல்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. ஒப்பந்ததாரா் மற்றும் தொழிற்சாலை நிா்வாகத்தின் பங்கு மற்றும் அலட்சியப் போக்கு சரிபாா்க்கப்பட்டு வருகிறது. மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.